விஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.! வைரலாகும் வீடியோ.!

0
2695
vijay
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் வெளிவர உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த பிகில் படம் அக்டோபர் 27ஆம் தேதி அதாவது தீபாவளியன்று திரையரங்குக்கு வரப்போகிறது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இதனை கொண்டாடும் வகையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர் அறிவித்தார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹாஸ்டக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய்யின் பிகில் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டும் வருகின்றன.இது மட்டுமில்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

-விளம்பரம்-

நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சுக்கள் ரசிகர்களை ஆர்ப்பாட்டத்திலும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் பேசுவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் தமிழக மக்கள்.தளபதி விஜய் எப்பவுமே ஒரு விழாவில் கலந்து கொண்டால் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அவர் எதைப் பற்றி பேச போகிறார் என்பதுதான். மேலும், அவர் பொதுநல விஷயங்களையும் ,அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை கூட பேசி தன்னுடைய கருத்துக்களை அந்த இடத்தில் பதியவைப்பது வழக்கமான ஒன்றுதான்.

- Advertisement -

மேலும், இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி முடிந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், சன் டிவி நிறுவனம் விஜய் அவர்கள் பேசிய ஒரு சில காட்சிகளை கட் செய்து எடிட் பண்ணி சில வரிகளை நீக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து இருந்தார்கள். அதில் சில வாரங்களுக்கு முன்னால் பேனர் விழுந்து இறந்து போன சுபஸ்ரீ பற்றி விஜய் அவர்கள் கோபமாக பேசி இருந்தார். மேலும், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் பேனர் பிரிண்ட் செய்தவர்கள், வண்டி ஓட்டுநர்கள், பேனர் கட்டி விட்டவர்கள் என அப்பாவி மக்களின் மீது பழி போடுவது ரொம்ப தவறு என்றும் அவர் ஆவேசத்துடன் பேசியிருந்தார்.

மேலும் யாரை எங்கே உட்கார வைக்கணுமோ , நாம அவர்களை அங்கே உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என்று இதை மக்களுக்கு புரியும் வகையில் கூறினார். சுபஸ்ரீ மரணத்திற்குமுழுக்க முழுக்க காரணம் அரசியல்வாதிகளின் அலட்சியத்தாலும், பொறுப்பு இன்மையாலும் ஏற்பட்டது தான் என்று இணையங்களில் பரவி வருகிறது. விஜய் அவர்களின் இந்த வெளிப்படையான, யாருக்கும் பயப்படாமல் பேசிய இந்த பேச்சை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வியந்து போனார்.ஆனால், இந்த விஷயத்தை சன் டிவி நிறுவனம் நீக்கி ஒளிபரப்பு செய்ததால் ரசிகர்கள் அதிக கோபத்துடன் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இதுமட்டுமல்லாமல் பிகில் படத்தில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பேசியதை கூட சன் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லையாம். இதுகுறித்து ட்விட்டரில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ள டேனியல்,  “விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் சன் டிவி நிறுவனத்தை குறித்து திட்டியும் வருகின்றனர். இருப்பினும் நீக்கப்பட்ட விடியோக்கள் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement