விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில்களில் வெளியான சீரியல்கள் அனைத்தும் ஹிட். அந்த வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.
இந்த தொடரில் நடித்து வந்த ஷிவானி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் துவங்கிய ‘கடைக்குட்டி சிங்கம் ‘ தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஷிவானி. ‘கடைக்குட்டி சிங்கம்’ ஒளிபரப்பாகத் தொடங்கி முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கதாநாயகி ஷிவானி தொடரிலிருந்து வெளியேறி இருந்தார்.
கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதிலும் தற்போது ஊரடங்கு என்பதால் மற்ற நடிகைகளை போல இவரும் #Throwback என்ற பெயரில் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இவர் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், அதே புகைப்படத்துடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு ‘நான் இப்போதும் அப்படி தான் இருக்கிறேனா ‘ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறுவயதில் எடுத்த புகைப்படங்களில் இந்த புகைப்படம் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார் ஷிவானி.