சிறப்பு காட்சிகள் தாமதமானதால் ஆத்திரம். கலவரம் செய்த ரசிகர்கள். வெளிவராத வீடியோ இதோ.

0
2531
Bigil
- Advertisement -

தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிகில் படம் இன்று திரையரங்குகளில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். மேலும்,விஜய் ரசிகர்கள் பயங்கர குஷியில் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

https://twitter.com/imrajkumarkanna/status/1187582547577856002

- Advertisement -

இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் ட்ரைலர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இது பிகில் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இது மட்டும் இல்லாமல் பிகில் போஸ்டரில் இளைய தளபதி விஜய் அவர்கள் கறி வெட்டும் கட்டையின் மீது செருப்பு கால் வைத்து உட்கார்ந்து உள்ளார் என்று கரிகடை சங்கத்தினர் அனைவரும் போஸ்டர் கிழித்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும்,பிகில் படத்தின் போஸ்டர்களை மாற்ற வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், டிரைலர் வெளியாகி சில நிமிடங்கள் கூட இருக்காது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் “சக் தே” படத்தை ரீமேக் செய்து உள்ளார்கள் என்று தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த படம் என்னுடைய கதையில் இருந்து திருடியது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதையும் பாருங்க : இதய திருடன் படத்தில் நடித்த காம்னாவா இது. திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கார் பாருங்க.

இப்படி தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இருந்தபோதிலும் இணையதளங்களில் பிகில் படம் குறித்து பல சர்ச்சைகளும், விவாதங்களும் போய்க் கொண்டு இருந்த நிலையில் இன்று பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து தமிழகமே கலகட்டியது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதை மீண்டும் பிகில் படம் மூலம் ரசிகர்கள் நிரூபித்துள்ளார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ரவுண்டானா பகுதியில் பிகில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ரணகளம் செய்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

https://twitter.com/imrajkumarkanna/status/1187585972365492225

மேலும்,பிகில் படத்தின் சிறப்பு காட்சிகள் தாமதமாக கொடுத்ததால் கிருஷ்ணகிரி மாவட்டம் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் அடித்து நொறுக்கும் அளவிற்கு பயங்கரமாக கூச்சல் இட்டு சண்டை போட்டு அமக்களம் செய்து உள்ளார்கள்.இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் விஜய் ரசிகர்கள் செய்து வந்த ஆர்ப்பாட்டம்,இன்று வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தளபதி ரசிகர்கள் தியேட்டர்களில் பிகில் படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த வீடீயோவை பார்த்தாவது எல்லா தியேட்டர்களிலும் விஜய் ரசிகர்களுக்கு படத்தின் டிக்கெட்களை சீக்கிரம் கொடுங்கள். அதனால் கலவரம் வருவதைத் தடுங்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement