விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும் உருவாக்கியவர் மீரா மிதுன். மேலும்,இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கலவரங்களை உருவாக்கியதில் மீரா மிதுனுக்கு பெரிய பங்கு உள்ளது என்று கூட சொல்லலாம்.மீரா மிதுன் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் மாடல் அழகி பட்டம் வென்றவர். ஆனால், மாடல் அழகி பயிற்சிக்காக பல நபர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார் என்று ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் மீது குற்றம் சுமத்தி வந்தார். மேலும், இதற்கான வழக்கும் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஆனால், இந்த பிரச்சனை குறித்து போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கே வந்து விட்டது என்று சமூக வலைதளங்களில் பரவியது. அது மட்டும் இல்லைங்க பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சேரன் என்னை தவறான எண்ணத்தில் தான் தொட்டு தூக்கினார் என்று பரபரப்பையும் பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார் மீராமிதுன். இதற்காக கமலஹாசன் அவர்கள் குறும்படம் போட்டு சேரன் எந்த தவறான எண்ணத்திலும் செயல்படவில்லை என்று நிரூபித்தார்.
ஆனால், இன்னும் வரை மீராமிதுன் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வந்ததால் மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், மக்களின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் ஆளானார்.அதோடு விடலை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அனைவரைப் பற்றியும் தாறுமாறாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி வந்திருந்தார்.இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பெருமை பேசிக் கொண்டிருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் செய்த காரியத்தால் அவர் படத்தில் நடித்த இருந்த காட்சிகளை நீக்கி விட்டு வெளியிட்டார்கள் படக்குழு.
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பெரும் அதிர்ச்சியான மீராமிதுன் ,எப்படி? நீங்கள் படத்திலிருந்து காட்சியை நீக்கலாம் என படக்குழுவினரிடம் சண்டை போட்டுக் கொண்டு வருகிறார். இது மட்டும் இல்லைங்க ட்விட்டரில் இது குறித்து பல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில்’ அக்னிசிறகுகள்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீராமிதுன் கமிட்டாகி இருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் எழுந்த சர்ச்சைகளால் இவர்களும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் படத்தில் இருந்து நீக்கி விட்டனர். மேலும் இவருடைய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள்.
இதனால் கடும் கோபம் கொண்ட மீரா மிதுன் கமலஹாசன் மற்றும் அவர் குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு கூறியது, சினிமா துறையில் பிரபலமான குடும்பம். தங்களுடைய செல்வாக்கின் மூலம் அவருடைய மகளை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லையா? இது தவறான செயல் இல்லையா? என்று கேள்வி கேட்டு வருகிறார்.மேலும், அம்மா கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குனர் நவீன் அவர்களை கூட விடவில்லை. ஏன்? இப்படி இரட்டை வேஷம் போட்டு நடிக்கிறீர்கள் என்றும் தாறுமாறாக கேள்வி கேட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை மட்டும்தான் திட்டினார் என்று பார்த்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரை கூட விடவில்லை. அவரையும் அவரது குடும்பத்தாரையும் விமர்சித்துக் கொண்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் மீராமிதுனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.