13 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை போன்றே தற்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இந்திரஜா.

0
4079
indraja

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னாக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பிகில் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்துஇருந்தார்.

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் தான் இந்திரஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இந்திரஜா, பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அவரை குண்டம்மா.. குண்டம்மா. என அழைத்து வெறியேற்றும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் பாருங்க : வறுமையில் வாடிய பில்லா 2 நடிகர் – நேரில் சென்று சந்தித்து உதவி செய்த முதல் பிக் பாஸ் பிரபலம்.

- Advertisement -

பிகில் படத்திற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் இந்திரஜா படு ஃபேமஸ். அதன் மூலமாக தான் இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதேபோல அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்து விதவிதமான டிக் டாக் வீடியோக்களை செய்து உள்ளார். சமீபத்தில் கூட இவர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

அதுவும் சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டது பலரையும் வியப்படைய வைத்தது. இந்த நிலையில் இந்திரஜா, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் சமீபத்தில் அதே போன்று எடுத்த புகைப்படம் ஒன்றையும் இணைத்து குயூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : தாமிரபரணி பட நடிகை பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

இந்த புகைப்படம் பதிவிடபட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்களை குவித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை இந்திரஜா மாஸ்டர் படத்தில் வெளியாகவிருக்கும் வாதி கம்மி பாடலுக்கு தன் அப்பா ரோபோ சங்கர் உடன் சேர்ந்து இவர் குத்தாட்டம்போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement