இளைய தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கபட்டுள்ளது.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் கடந்த 21 ஆம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 இரவு 12 மணிக்கும் வெளியிட பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மூலம் இந்த படத்தில் விஜய் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானது.
இதையும் பாருங்க : ஜட்ஜே சொன்னாலும் என் அம்மா கூட போக மாட்டேன்.! பெற்ற மகனே வனிதாவை எப்படி பேசுகிறார்.!
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் பெயர் மைக்கெல் என்பது அவர் அணிந்திருக்கும் ஜெர்ஸியின் மூலம் தெரிகிறது. சிலர் இளம் வயது விஜய்யின் அப்பாவாக வரும் வயதான விஜய்யின் பெயர்தான் பிகில் என்று சொல்கின்றனர்.
மேலும், இந்த படம் குறித்த சில கேள்விகளை அடிக்கடி இந்த படத்தின் தயாரிப்பாளர் ட்வீட் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு பிகில் பட ஒரு போஸ்டரில் விஜய் கொடுத்த போஸ் அவரது பழைய படம் ஒன்றில் அப்படியே இருக்கும், அது எந்த படம் என்று கேள்வி கேட்டிருந்தனர். தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது.