மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக போராடும் ஆசிரியர். இது தான் மாஸ்டர் படத்தின் கதையா ?

0
6596
master
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for silenced korean movie

- Advertisement -

இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் கர்நாடகாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. மேலும், இந்த படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்நிலையில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் கொரிய மொழி படத்தின் தழுவல் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : நடிகை கௌதமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் கௌதமியின் திருமண புகைப்படம்.

மாஸ்டர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் வாரத்தில் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் தொடங்க உள்ளது என கூறியுள்ளார்கள். இந்த படப்பிடிப்பு இந்த மாதம் மூன்றாம் வரை நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின் விஜய் சேதுபதி இந்த படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். அப்போது அவருக்கும், விஜய்க்கும் இடையேயான முதல் காட்சியை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை கொரியன் படத்தின் தாக்கத்தினால் உருவானது என சமூக வலைத்தளங்களில் கூறி உள்ளார்கள். கொரியன் மொழியில் 2011 ஆம் ஆண்டு வெளியான “சைலன்ஸ்டு” என்ற திரைப்படத்தின் கதையை தழுவி தான் இந்த மாஸ்டர் படம் உருவாகி வருவதாக வெளிவந்துள்ளது. அதோடு இந்த சைலன்ஸ்டு படம் கொரிய மொழியில் பயங்கர வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்துள்ளது.

-விளம்பரம்-
Image result for master and silenced

இதுவரை வெளியான படங்களில் சிறந்த புரட்சிகரமான படமாக இந்த படம் அமைந்தது என்று கூறியிருந்தார்கள். இந்த படம் பள்ளி மாணவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக போராடும் ஒரு ஆசிரியரின் கதையை மையப்படுத்தி இருந்தது. இதுவரை கிடைத்துள்ள செய்திகள் அடிப்படையில் விஜய்யின் கதாபாத்திரமும் இந்த படத்தின் கதையும் ஒன்றாக உள்ளது என்றும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான ஒரு புகைப்படத்தில் விஜய்யின் கழுத்தில் ஐடி கார்டும் இருந்தது இதனை உறுதிபடுத்தியது.

விஜய் படம் படப்பிடிப்பு தொடங்கிய காலத்திலிருந்து படம் திரையரங்குக்கு வெளிவரும் வரை பயங்கர சிக்கல்களிலும், சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தான் வருகிறது. இந்த படம் தொடங்கியதில் இருந்து படத்தின் தலைப்பு, பார்வை குறைபாடு உள்ள பள்ளியில் நடைபெற்ற படப்பிடிப்பு என பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த படம் கொரிய படத்தின் தழுவல் இல்லை என மாஸ்டர் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படம் விஜய்க்காக எழுதிய புதிய கதை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் உறுதி அளிக்கிறார். இருந்தாலும் சோசியல் மீடியாவில் மாஸ்டர் படம் குறித்த வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.

Advertisement