பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதலியுடன் தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பாருங்க ..

0
26619
tharshan-sanam
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 வேற லெவல் கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தர்ஷன். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம் தர்சன்.

-விளம்பரம்-
Image result for tharshan sanam

மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார்.தர்ஷன் தான் இறுதி கட்ட போட்டியாளராக சென்று பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆக கூடிய வாய்ப்புள்ளது என்று ஆரம்பத்திலிருந்தே மக்களாலும், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பேசப்பட்டு வந்த விஷயம். ஆனால், என்ன காரணமோ? என்னவோ? தெரியவில்லை. மலையே புரட்டிப் போடும் அளவிற்கு இருந்தது தர்ஷன் எலிமினேட்.தர்சன் வெளியேறியதைத் தொடர்ந்து பல கேள்விகள், பல குமுறல்கள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.பிக் பாஸ் மேடையிலேயே பல பேர் கண்ணீர் மல்க அழுதார்கள்.இன்னும் வரை தர்சனின் வெளியேற்றத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தர்சனுக்கு பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கவில்லை என்ற கவலை ஒரு பக்கமிருந்தாலும், உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

- Advertisement -

இது டைட்டில் வின்னர் பட்டத்தை விட மிக பெரிய வாய்ப்பு என்று தர்சன் கூறி இருந்தார்.அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் தர்ஷன்.மேலும்,தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.இந்நிலையில் தர்சன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால்,அவர்கள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் நடிகை ஷெரின் தர்சனை காதலித்தார்.மேலும், தர்சன் நிலை தடுமாறாமல் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்தார். தற்போது சேரனின் நடிப்பில் வெளிவர உள்ள ‘ராஜாவுக்கு செக் ‘ என்ற படத்தின் பிரிவியூ ஷோ(preview show)வை பார்க்க சேரன் தர்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனால் தர்சன் தன்னுடைய காதலி சனம் ஷெட்டி உடன் சென்றிருந்தார். இதன் மூலம் தர்ஷன், சனம் ஷெட்டியை காதலிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லைங்க தர்ஷன் நம்ம ஷெரின் காதலை மறுத்து விட்டார் என்றும் இணையங்களில் கூறி வருகின்றனர். மேலும், இவர்கள் சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தின் பிரிவியூ ஷோவுக்கு சென்றிருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார்கள்.தற்போது இந்த புகைப்படம் வேற லெவல்ல இணையங்களில் பயங்கரமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து இந்த ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.

Advertisement