என்னை கல்யாணம் செய்துக்குவியா? நடிகை இந்துஜாவின் இன்ஸ்டாகிராமில் கேட்ட பிரபலம்.

0
259811
indhuja
- Advertisement -

சினிமாவில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் விரைவில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்த ‘மேயாத மான்’ திரைப்படத்தில் வைபவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் ‘தங்கச்சி’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடைந்தது. மேலும், வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கரின் காட்சிகளைப் போல இவரது காதல் காட்சியும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

-விளம்பரம்-

மேயாத மான் படத்தில் இவரது சிறப்பான நடிப்பை கண்டுஈர்க்கப்பட்ட இயக்குனர்கள் அடுத்தடுத்து இவரை படங்களில் கமிட் செய்ய தொடங்கினார்கள். மேயாதமான் படத்தை தொடர்ந்து மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங் போன்ற அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார் இந்துஜா. சமீபத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் இந்துஜா. அதேபோல பிகில் திரைப்படத்திற்கு முன்னதாக இவர் நடித்த மகாமுனி திரைப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த ரித்விகா. இவருக்கும் இந்த பிரச்சனையா ?

- Advertisement -

பிகில் படத்தை தொடர்ந்து நடிகை இந்துஜா சூப்பர் டூப்பர் படத்தில் நடித்திருந்தார். மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். ஆனால், ஆர்யாவுடன் இவர் நடித்த மஹா முனி திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ஏற்கப்பட்டது.

இந்த படத்தில் ஆர்யா, மலையாள நடிகையும் அசுரன் படத்தில் நடித்த நடிகையுமான மஹிமா நம்பியாரும் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்துஜா தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றைபதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழ், என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று மஹிமா பதிவிட்டிருந்தார். அதற்கு இந்துஜாவும் வாங்க கல்யாண காதலை பண்ணுவோம் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement