தனது மனைவியுடன் பிகில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார். வைரலாகும் புகைப்படம்.

0
32909
rajiini-vijay
- Advertisement -

“ராஜா ராணி ,தெறி,மெர்சல்”ஆகிய படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் மாஸ் காட்டி வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜயும்,அட்லீயும் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். மேலும், “பிகில்” படம் தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்,ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கும் மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்களின் ‘சிங்க பெண்ணே ‘பாடல் வெறித்தனம். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து பட்டைய கிளப்புகிறது. பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு பிகில் படம் மூலம் சரவெடிய போட்டு ரசிகர்களை தெறிக்க விட்டு உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

மேலும்,விஜய்யின் பிகில் படம் ப்ளாக் பஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்தது என தகவல் வெளியானது. இது குறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்ப்பாட்டம் செய்து சந்தோசத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் அவர்களின் பிகில் படத்தை தனது மனைவியுடன் பார்த்து ரசித்துள்ளார். மேலும், அவர் சினிமா திரையரங்கில் பிகில் படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இது குறித்து ரஜினிகாந்த் தரப்பில் விசாரித்தபோது அவர் கூறியது, ஒய்.ஜி மகேந்திரன் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் ஒன்றை தனது மனைவியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 4 ஃபிரேம்ஸ் திரையரங்கில் பார்த்து ரசித்ததாக கூறினார். அதற்கு பிறகு விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தில் இருவரும் சேர்ந்து பார்த்து உள்ளோம் என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் பிகில் வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குனர் அட்லீ அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கூறியிருந்தார்.மேலும்,தலைவர் (ரஜினி) ஓகே என்று சொன்னால் போதும் சூட்டிங் தொடங்க வேண்டிய வேலைதான் என்றும் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement