இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடம் பிடித்த தளபதியின் பிகில்.

0
5446
Bigil
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பல ஆண்டுகளாக இளையதளபதி என்ற பட்டத்துடன் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வரும் இவரது படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் மாபெரும் சாதனைகளை படைத்தது. சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் ,விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார், தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அட்லி மற்றும் விஜய்யின் இந்த கூட்டணி. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருந்தது.

-விளம்பரம்-
https://twitter.com/itsjat32/status/1190159197263917056

இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும், இந்த படத்திற்கு போட்டியாக வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி கண்டது இதனால் பிகில் படத்திற்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்ததாக தியேட்டர் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள். இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. மேலும், இதுவரை 250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது பிகில் திரைப்படம் சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, நார்வே, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளிலும் வெளியாகியிருந்தது .இந்தியாவில் எப்படியோ என்று தெரியவில்லை ஆனால், வெளிநாட்டில் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக நடைபெற்று வருகிறது. இதுவரை பிகில் திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 10 மில்லியனை வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இதுவரை வெளிநாட்டில் வெளியான எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு வசூலை செய்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டில் வெளிநாட்டில் வெளியாகி அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பிகில் திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மற்றும் சர்க்கார் திரைப்படம் வெளிநாடுகளில் 10மில்லியன் வசூலைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிகில் திரைப்படம் விமர்சனரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக இப்படிப்பட்ட சாதனைகளை செய்து வருவது படக்குழுவையும் ரசிகர்களையும் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல தமிழ் நாட்டிலும் இந்த படம் இன்னும் வசூல் சாதனைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement