நீ மட்டும் தனியா வா, விஜய் பட நடிகையிடம் தவறாக நடந்த நடிகர். அதுவும் இந்த வயதில்.

0
45300
isha-gopikar
- Advertisement -

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து இருப்பவர் தான் நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில் அகத்தியன் இயக்கிய ‘காதல் கவிதை’, அரவிந்த்சாமி உடன் நடித்த ‘என் சுவாச காற்றே’,கேப்டன் விஜய்காந்தின் ‘நரசிம்மா’, தளபதி விஜய்யின் ‘நெஞ்சினிலே’ உட்பட சில படங்களில் நடித்தவர். சில தமிழ் படங்களில் இஷா கோபிகர் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும், இவர் அதிகமாக ஹிந்தியில் தான் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும்,இஷா கோபிகர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “எஸ்.கே.14” படத்தில் நடிகை இஷா கோபிகர் நடித்து வருகிறார். மேலும்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார் இஷா கோபிகர். இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படம் ஆகும்.

-விளம்பரம்-
Isha Koppikar

மேலும், எனக்கு சிவகார்த்திகேயனை பார்க்கும் போது ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது இஷா கோபிகர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் சினிமா துறையில் தான் சந்தித்த கஷ்டங்களையெல்லாம் பேசியுள்ளார். மேலும், சினிமா பட வாய்ப்புக்காக இஷா கோபிகரை தனியாக சந்திக்க வரும்படி சிலர் கேட்டார்கள் என்றும் வெளிப்படையாக பேட்டியில் பேசியுள்ளார். பேட்டியில் இஷா கோபிகர் கூறியது, நான் என்னுடைய 15 வயதில் பிரபல தயாரிப்பாளர் அவர்கள் படத்தில் சினிமா துறையில் முன்னணி ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக அவரிடம் பேசினேன். அவர் அந்த ஹீரோவிடம் பேசும்படி என்னிடம் கேட்டார்.

இதையும் பாருங்க : இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடம் பிடித்த தளபதியின் பிகில்.

- Advertisement -

நானும் அந்த ஹீரோக்கு போன் செய்து பேசினேன். அப்போது அவருடைய மொத்த ஷெடுளையும் என்னிடம் சொல்லி நேரில் வந்து என்னை சந்திக்கும் படி கூறினார். மேலும், அவர் யாருடன் நீங்கள் வருவீர்கள் என கேட்டார். அதற்கு நான் என் டிரைவருடன் தான் வருவேன் என கூறினேன். நீங்கள் தனியாக வாருங்கள்,உங்களுடன் யாரையும் கூட்டிட்டு வராதீர்கள் என்று கூறினார் அந்த சூப்பர் நடிகர். மேலும், அவர் என்னிடம் என்ன கேட்கிறார் என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. அதனால், நான் என்னை சுதாரித்து கொண்டு நாளைக்கு நான் பிரீ இல்லை ,கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் எனக் கூறி விட்டு போனை வைத்து விட்டேன்.

Image result for isha koppikar tamil movies"

அதன் பிறகு அந்த தயாரிப்பாளருக்கு ஃபோன் செய்து என்னுடைய திறமைக்கும், அறிவுக்கும்,அழகுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள், இல்லை என்றால் விடுங்கள். நீங்கள் எதிர்பார்க்கிற எந்த விஷயத்தையும் நான் செய்யமாட்டேன் என கண்டிப்புடன் கூறி விட்டேன் என நடிகை இஷா கோபிகர் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த பாலிவுட் நடிகர் யார்?அந்த தயாரிப்பாளர் யார்? என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை.இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் யார் அந்த நடிகர்? தயாரிப்பாளர் ? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement