ஏ ஆர் குரலில் இணையத்தை தெறிக்கவிடும் ‘பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே பாடல்.!

0
1507
Singappeney
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : இந்த வாரம் வைல்ட் கார்டு இருந்தால் எலிமினேஷனில் இது தான் நடக்குமாம்.! 

- Advertisement -

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் என்ற மகன் விஜயும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தில் விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று அறிவிப்பு வெளியானது.

Image

மேலும், சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஏ ஆர் ரஹ்மான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலும் விஜய் பாடிய ‘வெறித்தனம்’ என்ற பாடலும் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ள ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-


Advertisement