ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘வெறித்தனம்’ பாடலின் லிரிகள் வீடியோ.!

0
1226
verithanam
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில். மெர்சல் திரைப்பட பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ராஹ்மான், விஜய் – அட்லீ கூட்டணியில் இணைந்திருக்கும் இந்த திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள “வெறித்தனம்” என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டிருந்த வீடியோ பதிவில் விஜய், ஏ,ஆர்.ரஹ்மான், அட்லீ, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இணைந்து “வெறித்தனம்” பாடல் குறித்த ஆலோசனையை மேற்கொள்வது போன்று உள்ளது.

இதையும் பாருங்க :சன்னி லியோனா இப்படி குடும்ப குத்து விளக்காய் மாறிவிட்டார்.! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.! 

- Advertisement -

மேலும், இன்று பாடல் வெளியாக இருந்த நிலையில் விஜய் ரசிகர்கள் வெறித்தனம் என்ற ஹேஷ் டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.இ இந்த நிலையில் இந்த பாடல் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை குசியாக்கியுள்ளது.

இறுதியாக விஜய் பைரவா படத்தில் ‘பாபா பாபா ‘ பாடலை பாடி இருந்தார். தற்போது இரண்டு வருடங்களுக்கு பின்னர் விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளதால் இந்த பாடலுக்கு இருந்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. தற்போது இந்த பாடலை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement