பிகில் இசை வெளியீட்டு விழால அப்படி சொன்ன விஜய், இப்போ என்ன செய்ய போறார் – கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்.

0
1727
Vijay
- Advertisement -

சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் திரையிடபிபட்ட திரையரங்கில் விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து ரஜினி மற்றும் விஜய்க்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ஏற்கனவே நெல்சனின் முந்தய படமான பீஸ்ட் திரைப்படமும் ரஜினியின் முந்தய திரைப்படமான அண்ணாத்த திரைப்படமும் தோல்வியை தழுவியதால் இந்த படம் இருவருக்கும் ஒரு முக்கிய படமாக பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் நேற்று ஜெயிலர் திரைப்படம் ஓடிய திரையரங்கிற்கு வெளியே விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வைரலானது. விஜய் வாழ்க! என்று முழக்கம் போட்டதால் தான் அந்த நபரை ரஜினி ரசிகர்கள் தாக்கியதாக கூறப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘சென்னை குரோம்பேட்டை வெற்றித் திரையரங்கில் யூடியூப் சேனலுக்காக தனது கருத்தை தெரிவித்ததற்காக விஜய் ரசிகர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். பொதுவெளியில் பேச்சு சுதந்திரம் இந்த விளிம்புநிலை குழுக்களால் நெறிக்கபடுகிறது. உண்மையை சொன்ன விஜய் ரசிகர் மீது ரஜினி ரசிகர்கள் தாக்குதல்? திரையரங்க வளாகத்தினுள் இப்படியான பொறுக்கித்தனங்களை திரையரங்க நிர்வாகம் இன்றுமுதல் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.

ரவுடித்தனம் செய்த நபர்களின் CCTV வீடியோவை காவல்துறைக்கு பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உரிய பாதுகாப்பு தர இயலாவிட்டால் எதற்காக யூ ட்யூப் சேனல்களை உள்ளே அனுமதிக்கிறீர்கள்? அதையாவது இனி தவிருங்கள்.திரைப்பட ரசிகர்களே… எந்த நடிகனுக்கும் சொம்பு தூக்காமல் தைரியமாக உண்மையை பேசுங்கள். ரவுடித்தனம் செய்வோர் மீது உடனே காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து தாக்குதலுக்கு உட்பட்ட விஜய் ரசிகருக்கு.. விஜய் மக்கள் இயக்கம் நீதி கிடைக்க உடனே களத்தில் இறங்க வேண்டும். புகார் அளித்த விவரங்களை ஒரு ப்ரெஸ் மீட் வைத்து மீடியாவுக்கு தெரிவியுங்கள்.இப்படியான வன்முறைகளை தவறு. என் ரசிகன் எனக்கூறி இப்படி செய்ய வேண்டாமென சொல்வதற்கு ரஜினிகாந்த் ஐயாவிற்கு தைரியம் உள்ளதா அல்லது இதையெல்லாம் மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.கருத்தை கருத்துடன் எதிர்கொள்ள வக்கற்ற கோழைகள்தான் இப்படி கையை நீட்டுவார்கள்.

ட்ரைலரை தியேட்டரில் போடுதல், அதன் மூலம் எல்லைமீறியா கூட்டத்தை கூட்டுதல், அதிகாலைக்காட்சிக்கு கட்டுக்கு அடங்காத ரசிகர்களை கொண்டாட்டம் எனும் பெயரில் தியேட்டரின் மைய வளாகத்தில் அனுமதித்தல், அதன் மூலம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதல், பல்வேறு யூட்யூப் சேனல்களை மக்களின் விமர்சனம் கேட்க அனுமதித்தல். அச்சமயம் மக்களுக்கு போதுமான பாதுகாப்பை இதுபோன்று உறுதி செய்ய தடுமாறுதல்.

இப்படியான போக்கினை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் உடனடியாக  நிறுத்த வேண்டும் அல்லது பொதுமக்களுக்கான 100% பாதுகாப்பை காவல்துறை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் மூலம் இன்றுமுதல் உறுதி செய்ய வேண்டும்.இதே போக்கினை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்வதாக உத்தேசம்? இப்படியான செயல்களை இனியும் தியேட்டர் நிர்வாகங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் சேதமும், அவமானமும் உங்களுக்கே.விஜய் ரசிகர்கள் இதேபோன்ற பொறுக்கித்தனத்தை பின்பற்றக்கூடாது. அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்ளுங்கள். போலீஸில் புகார் அளியுங்கள்.

மக்கள் அனைவரும் மனதில் பட்டதை விமர்சனமாக கூறுங்கள். எவருக்கும் அஞ்சாதீர்கள். ஏனெனில் இது ஜனநாயக நாடு. தாலிபான்கள் சர்வாதிகாரம் செய்யும் ஆப்கானிஸ்தான் அல்ல. ரவுடித்தனத்திற்கு முடிவு கட்டுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.திரையரங்குகளில் சீரழியும் இப்படியான சட்டம், ஒழுங்கை தமிழக அரசு இன்றுமுதல் கட்டுப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

‘என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்’ என்று பிகில் இசைவெளியீட்டு கூறிய விஜய் .. தற்போது என்ன செய்யப்போகிறார்? புதிதாய் தொடங்கியுள்ள வழக்கறிஞர் பிரிவின் சட்ட உதவியுடன் தாக்குதல் நடத்தியோரை உடனடியாக கைதுசெய்ய முயற்சி எடுப்பாரா? பாதிக்கப்பட்ட ரசிகருக்கு நேரிலோ அல்லது வீடியோ கால் மூலமோ ஆறுதல் சொல்வாரா? அல்லது குறைந்தபட்சம் ஒரு ட்வீட்டாவது போடுவாரா?அல்லது இசைவெளியீட்டு பேசியதை மறந்து விடுவாரா?அல்லது இசைவெளியீட்டு பேசியதை மறந்து விடுவாரா? என்று குறிப்பிட்டு விஜய் மக்கள் இயக்கம், முதலவர் ஸ்டாலின், தமிழ்நாடு போலீஸ் உள்ளிட்டோரை டேக் செய்து இருக்கிறார்.

Advertisement