சங்கி இல்லையா? அப்போ இதெல்லாம் என்ன? மணிப்பூர் கலவரம் முதல் மாமீசம் வரை ரஜினியை பாய்ண்ட் பாயிண்டாக கேள்வி கேட்ட ப்ளூ சட்டை.

0
350
- Advertisement -

தனது அப்பா சங்கி இல்லை என்று பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பேச்சை கேலி செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது ரஜினி மகளையும் வம்பிழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

-விளம்பரம்-

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா எடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருக்கிறது.இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ‘சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன் மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது.

-விளம்பரம்-

ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை’ என்று கூறி இருந்தார். சமீப காலமாகவே ரஜினி பா.ஜ.கவிற்கு ஆதரவாக பேசி செயல்பட்டு வருகிறார் என்ற விமர்சனம் எழுந்த நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு அதனை பொய்யாகி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த பேச்சை கேலி செய்யும் வகையில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘ * Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன். * மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன். * பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன். * கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன். * தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன்.

* பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன். * துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன். * உலக அரசியல் இல்லாத ‘ஆன்மீக அரசியல்’ எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன். * மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன். * மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன்.

* போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன். * காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப்பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்… குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன். * ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப்போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன். * இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன். ஆகவே… நான் சங்கி இல்லை. லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள் ‘ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement