ருத்ர தாண்டவம் படத்த ஏன்டா Review பண்ணல – மேடையில் கமன்ட்டை படித்து தெறிக்கவிட்ட ப்ளூ சட்டை.

0
26034
maaran
- Advertisement -

ருத்ர தாண்டவம் படத்தை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்ற கமென்டிற்கு வந்த பதில் கமெண்டை படித்து மேடையில் தெறிக்கவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். அணைத்து படங்களையும் விமர்சிக்கும் மாறன் ஒரு படத்தை எடுத்துக்காட்டட்டும் என்று பலரும் மாறனை விமர்சித்துள்ளனர்.

இதையும் பாருங்க : எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல – அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்கர் நாயகன் அபிஷேக்கின் ஸ்டோரி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் ஒரு புதிய படத்தை இயக்குவதாக அறிவித்து கடந்த 2019 ஆம் படத்தின் அறிவிப்பையும் அறிவித்தார். இந்த படத்தின் பணிகளை முடித்துவிட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பினார் மாறன். ஆனால், படத்திற்கு தணிக்கை குழு தடை விதித்தது. பின்னர் எப்படியோ போராடி இந்த படம் சென்சரை கடந்து வந்தது.

Shalini Ajith lauds her brother Richard for 'Rudra Thandavam' | Tamil Movie  News - Times of India

சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய மாறன். தனக்கு வந்த கமெண்டுகளை படித்து காட்டினார். அதில் ஒரு கமெண்டில் ‘ருத்ர தாண்டவம் படத்தை ஏன்டா விமர்சனம் பண்ணல’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கமெண்டை படித்த மாறன் ‘ருத்ர தாண்டவம் படம் பாக்க ஷாலினி வந்தாங்களே அவர் கூட அஜித் ஏன்டா வரல’ என்று போட்டுள்ளதாக படித்து காட்டி மேடையில் தெறிக்க விட்டார் மோகன்.

-விளம்பரம்-
Advertisement