மருந்து கடையில் வியாபாரம் அதிகரிப்பு – சூர்யாவின் கண்ணீரை கேலி செய்யும் வகையில் ப்ளூ சட்டை போட்ட போட்டோ.

0
349
- Advertisement -

கடந்த வாரம் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜய்காந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் கடந்த மாதம் 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவித்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கு வராத நடிகர் சூர்யா தற்போது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தன்னுடைய அஞ்சலியை செலுத்தி இருக்கிறார்.

அஞ்சலி செலுத்திய சூர்யா:

அப்போது அவர் கதறி கதறி அழுது, சிறிது நேரம் தரையில் கண்களை மூடி அமர்ந்து அழுதும் இருக்கிறார். இதனை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, அண்ணனுடைய பிரிவு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் 4,5 படங்கள் நடித்த பிறகும் எனக்கு பெரிய பாராட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பத்து நாட்கள் வரை அவரோடு சேர்ந்து பணியாற்றி இருந்தேன்.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்து சொன்னது:

ஒவ்வொரு நாளும் ரொம்ப அன்பாக என்னை நடத்தினார். முதல் நாளே அவருடன் சேர்ந்து சாப்பிடுமாறு அழைத்தார். நான் வேண்டுதலுக்காக 8 ஆண்டுகள் அப்போது அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். அப்போது அவர் என்னை உரிமையுடன் திட்டி, நீ நடிகன். உடலில் சக்தி வேண்டும் என்று சொல்லி என்னை அசைவம் சாப்பிட வைத்தார். அந்த பத்து நாட்களும் நான் அவரை பிரம்மிப்போடு பார்த்தேன். அவர் எல்லோரையும் பக்கத்திலேயே வைத்திருக்க விரும்புவார். அவரை அணுகுவது சிரமமே இருக்காது. எப்போது வேண்டுமானாலும் அவரிடம் போய் பேச முடியும்.

சூர்யா குடும்பம் அஞ்சலி செலுத்தியது:

அவருடன் இன்னும் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு அதிகமாக இருக்கிறது. அவரை போல இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியின் போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு என்று கண் கலங்கியபடி சூர்யா பேசியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சூரியாவின் கண்ணீரை கேலி செய்யும் விதமாக கிளிசரின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் ‘சென்னை மருந்துக்கடைகளில் க்ளிசரின் வியாபாரம் அதிகரிப்பு?’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement