விடாமல் துரத்தும் கிரிமினல் வழக்கு – விஜய்சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். என்ன தெரியுமா?

0
590
- Advertisement -

விஜய் சேதுபதி- மகா காந்தி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் போடப்பட்டிருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மக்கள் செல்வன் என்ற அந்தஸ்துடன் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி அவர்கள் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விஜய்சேதுபதியை எட்டி உதைத்த நபர் மகா காந்தி. காரணம், விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல மகா காந்தி சென்றிருக்கிறார். பிறகு அவர் குரு பூஜையில் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி யார் குரு? என்று கேட்டிருக்கிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதி-மகா காந்தி சர்ச்சை;

அந்த சமயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விஜய்சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதியை உதைத்ததாகவும் மகா காந்தி பேட்டியில் கூறியிருந்தார். இதை அடுத்து இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் சோஷியல் மீடியாவில் வந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

மகா காந்தி அளித்த புகார்:

அந்த மனுவில், ‘விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடைய சாதனைகளை பாராட்டு தெரிவிப்பதற்காக சென்றேன். ஆனால், விஜய் சேதுபதி என்னை இழிவுபடுத்தி பேசியதோடு என்னுடைய ஜாதியை பற்றி தவறாக பேசினார். அது மட்டுமின்றி தனது மேலாளர் ஜான்சன் மூலமாக என்னை காதில் அறைந்தார் என்று கூறியுள்ளார். பின் மகா காந்தி, ஊடகங்களில் விஜய் சேதுபதியை குறித்து அவதூறு பரப்பி குற்றம் சாட்டி இருந்தார்.

விஜய் சேதுபதி கோரிக்கை:

ஆனால், மகா காந்தி தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்சினையை இரண்டு தரப்பு நபர்களும் உட்கார்ந்து பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருந்தது. ஆனால், இருவரும் பேசி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு :

அப்போது நீதிமன்றம், ஏற்கனவே இந்த விவகாரத்தை சமரசமாக பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம் என்று கூறினார்கள். அதற்கு விஜய் சேதுபதி தரப்பில், அந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், மகா காந்தி தரப்பில் என்னை பற்றி தொடர்ந்து அவதூறாக பரப்பி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. பின் விஜய் சேதுபதி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமில்லாமல் கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement