இன்னும் அந்த 12 நிமிஷம் எப்படி இருக்கும் பாருங்க – Prince படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.

0
262
- Advertisement -

பிரின்ஸ் படத்தை தாறுமாறாக விமர்சித்து இருக்கும் ப்ளூ சட்டையின் விமர்சனம் தற்போது வைரலாகி வாருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ப்ரின்ஸ் படம்:

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ப்ரின்ஸ். டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படம் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி, சூரி,ஆனந்த்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் சத்யராஜ் தன் குடும்பத்துடன் பாண்டிசேரியில் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் என அடித்துக் கொள்ளும் மக்கள் மத்தியில் அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. மனிதம் தான் முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்.

படத்தின் கதை:

சத்யராஜின் மகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் பள்ளியில் வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் கதாநாயகி மரியாவை (ஜெசிகா) சிவகார்த்திகேயன் காதலிக்கிறார். பின் இருவரும் காதலிக்க தொடங்கியவுடன் சிவகார்த்திகேயன் தன் தந்தை சத்யராஜ் இடம் காதல் குறித்து கூறுகிறார். ஆனால், தன்னுடைய மகன் காதலிக்கும் பெண் ஒரு பிரிட்டிஷ் பெண் என்று தெரிந்தவுடன் சத்யராஜ் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் ஜெசிகாவின் தந்தையும் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

இந்த அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து தன்னுடைய காதலி ஜெசிக்காவை சிவகார்த்திகேயன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கமான காதல் கதை என்பதால் படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், பிரின்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைய வாய்ப்பில்லை. இதனால் hat Trick வெற்றியை சிவகார்த்திகேயன் தவறவிட்டுவிட்டார். மேலும், படம் குறித்தும், சிவகார்த்திகேயன் குறித்தும் விமர்சித்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ப்ளூ சட்டையின் விமர்சனம் :

இப்படி நெட்டிசன்களே படத்தை வச்சி செய்தார்கள் என்றால் ப்ளூ சட்டை சும்மா இருப்பாரா. இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட மாறன் ‘படம் பாக்குறவன் எல்லாம் முட்டாளா, இந்த படம் grandஆவும் இல்ல Perfectஆவும் இல்ல. ஒக்காந்து பாக்க முடியல. இந்த படத்துல 12 நிமிச சீன வேற எடுத்துட்டாங்களாம். இன்னும் அது எப்படி இருக்கும் யோச்சி பாருங்க. வழக்கமா சிவகார்த்திகேயன் படம் என்றால் கொஞ்சம் கதை இருக்கும் அதில் கொஞ்சம் காமெடி, ஃபைட், சாங், டான்ஸ் என்று இருக்கும். இது எதுவுமே இல்லாத சிவகார்த்திகேயன் படமா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த படத்தை கட்டாயம் பாடுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement