தங்க மீன்கள் முதல் ப்ளூ ஸ்டார் வரை – 10 ஆண்டுகளாக நடித்தும் கவனம் பெறாதா சிறந்த நடிகை. யார் இந்த லிசி ஆண்டனி?

0
503
- Advertisement -

ப்ளூ ஸ்டார் நடிகை லிசி ஆண்டனி குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் அசோக் செல்வன். தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார்.

- Advertisement -

ப்ளூ ஸ்டார் படம்:

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறார் லிசி ஆண்டனி. இவர் கோலிவுட்டில் சூப்பர் ஹிட் கொடுத்த பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை லிசி ஆண்டனி குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்.

லிசி திரைப்பயணம்:

இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் கொடுத்த தங்க மீன்கள் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் குணசத்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். அதன் பின் தரமணி, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் எல்லாம் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

-விளம்பரம்-

லிசி நடித்த படங்கள்:

கடந்த ஆண்டு ஒடிடியில் வெளியாகி இருந்த ராங்கி படமும் இவருக்கு நல்ல ஒரு பெயரை கொடுத்தது. அதோடு இவருடைய உண்மையான பெயர் மக்களுக்கு தெரியவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சில நடிகர்கள் நடிக்க மறுத்த கதாபாத்திரங்களையும் இவர் ஏற்று நடித்து இருந்தார். கடந்த ஆண்டு வெளியாகியிருந்த நட்சத்திரம் நகர்கிறது, கட்டா குஸ்தி போன்ற படங்களில் லிசி நடித்து இருந்தார்.

ப்ளூ ஸ்டார் படத்தில் லிசி:

இப்படி 10 வருடங்களுக்கு மேலாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ப்ளூ ஸ்டார். ஒரு கீழ்தட்டு கிராமத்து அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இயேசு உடைய வசனங்களை சொல்லிக்கொண்டும், மகன் மேல் பாசத்தை பொழியும் அம்மாவாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். இவருடைய நடிப்பை பார்த்து ல் பிரபலங்கள் பலருமே பாராட்டி வருகிறார்கள்.

Advertisement