சினிமாவில் பல்வேறு நட்சத்திர தம்பதிகள் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா பிரசன்னா-சினேகா, கிருஷ்-சங்கீதா போன்ற பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாபி சிம்மா மற்றும் ரேஷ்மி ஜோடிகளும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் ஆவார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா, ஹீரோ வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இவர் திருமணம் செய்து கொண்ட ரேஷ்மியும் தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட ஒரு நடிகை தான்.நடிகை ரேஷ்மி 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஆல்பம்’ என்ற படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்திருந்தார். அதே போல ஜெயம் ரவி அறிமுகமான ‘ஜெயம்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ரேஷ்மி மேனன். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘இனிது இனிது’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரேஷ்மி மேனன்.
அந்த படத்தில் இளசுகள் மனதை கொள்ளைகொண்ட ரேஷ்மி, அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உறுமி’ படத்தில் பாபி சிம்மாவுடன் நடித்தார் ரேஷ்மி. அந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திகொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து முழுவதும் விலகிவிட்டார் ரேஷ்மி. இதனை தொடர்ந்து ரேஷ்மிக்கு 2017 ஆம் ஆண்டே பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முத்ரா சிம்ஹா என்று பெயர் வைத்தனர். இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார் ரேஷ்மா. தற்போது தனது கணவர் மகன், மகள் என்று ஒரு முழு குடும்ப பெண்ணாக வாழ்ந்து வருகிறார் ரேஷ்மி.
இதனால் பெரிதாக வெளியிலோ பொது நிகழ்ச்சிகளில் கூட ரேஷ்மி கலந்துகொள்வது கிடையாது. அதே போல சமூக வளைத்தளத்தில் கூட அடிக்கடி பதிவிடுவது கிடையாது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சென்ற சிவராத்தியில் தனது மகள் பரத நாட்டியம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவரின் மகள் அப்படியே ரேஷ்மியை போலவே இருக்கிறார்.