தாய் இறந்த இரண்டு நாளில் உயிரிழந்த பிரபல நடிகர். சோகத்தில் திரையுலகம்.

0
3016

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் இர்பான் கான். இவர் திரைப்படம் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர் மற்றும் மேடை அரங்கத்திலும் நடித்து உள்ளார். சலாம் பாம்பே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து இவர் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார். இதனால் இவருக்கு ஹாலிவுட்டிலும், பிரிட்டன் திரைப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

Bollywood Actor Irrfan Khan Reveals Battle with 'Rare Disease ...

இவர் நடிப்பில் வெளிவந்த Life of Pi என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அவர் ஜுராசிக் வேர்ல்ட் படத்திலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் இர்பான் கான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

இதையும் பாருங்க : விக்ரமின் அந்த படத்தை பார்த்துவிட்டு வெளிநாடு போக மாட்டேன்னு அடம்பிடித்தான் – தந்தையின் ரீ-வைண்ட் வீடியோ.

- Advertisement -

அது மட்டுமில்லாமல் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக வாங்கியுள்ளார்.இந்நிலையில் நடிகர் இர்பான் கான்னின் வாழ்க்கையில் சோகத்தின் மேல் சோகம் நடந்து கொண்டு உள்ளது. நடிகர் இர்பான் கான் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2018 ஆம் ஆண்டு நடிகர் இர்பான் கான் அவர்கள் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது.

Irrfan Khan Admits In ICU After Serious Condition- Mother Died ...

பின் இவர் இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயது 53. இர்பான் கானின் மறைவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நடிகர் இர்பான் கான் அவர்களின் தாயார் சாயிதா பேகம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஆனால், நடிகர் இர்பான் கான் அவர்கள் லாக்டவுன் சமயத்தில் மும்பையில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் போனது.

இதையும் பாருங்க : அட, கண்ட நாள் முதல் படத்தில் நடித்தது இந்த சிறுமி சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் தானா.

-விளம்பரம்-

இதனால் உறவினர்கள் செல்போன் மூலமாக இறுதி சடங்குகளை இர்பான் கானுக்கு காட்டினார்கள். அதை பார்த்து இர்பான் கான் கதறி அழுதார். பின்னர் தாய்க்கு இறுதி சடங்கில் மகன் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் இர்பான் கான் செய்தார். இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவந்தனர். தற்போது இர்பான் கான் மறைவால் அவரது குடும்பம் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement