பாலிவுட் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் சினிமாவிலும் அவ்வப்போது தலைகாண்பித்து வருகின்ற்னர். அந்த வகையில் சதமிழில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் மீது சமீபத்தில் மோசடி புகார் அளிக்கபட்டிருந்தது.
பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு சற்று புதுமையாக இருந்தார். இதனால் இவருக்கு இந்தியில் பல் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. பாலிவூடில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து வந்த இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “லிங்கா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ” நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். அதன் பின்னர் தமிழில் தலை காட்டவில்லை.
இதையும் பாருங்க : ட்ரை பண்ணுவேன் என்றால் என்ன அர்த்தம் ? கற்பழிப்பதற்கா ? ரசிகர் கேட்ட கேள்வியால் மன்னிப்பு கேட்ட மூடர் கூடம் நவீன்.
கடந்த சில காலமாக இந்தியிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் சோனாக்ஷி. இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருந்தாலும் மற்ற நடிகைகளை போல இவருக்கும் சமூக வளைத்ததில் சில ஹேட்டர்ஸ்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சோனாக்ஷி அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சோனாக்ஷி சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் ஒரு புகைப்படத்தில் ஆங்கிலத்தில் மோசமான வார்த்தையை குறிக்கும் வகையில் தனது விரலை காட்டி, முத்தத்துடன் என்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு இந்த ,மெஸேஜ் என்று குறிப்பிட்டுள்ளார் ஆனால், இந்த புகைப்படத்திலும் சோனாக்ஷியை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். இருப்பினும் சோனாக்ஷி சின்ஹாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை வீசி வருகின்றனர்.