தாய் பாசத்தை மிஞ்சிய தந்தை பாசம், தன் மகனுக்காக நெப்போலியன் செய்த தியாகம்- என்ன தெரியுமா?

0
315
- Advertisement -

தன் மகனுக்காக நெப்போலியன் செய்திருக்கும் தியாகம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கு திருமணமாக இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் இவருடைய மூத்த மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால், மணமகள் குறித்த விவரம் தெரியவில்லை. அதோடு இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை நெப்போலியன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்திருந்தார். கூடிய விரைவில் திருமணம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

நெப்போலியன் குறித்த தகவல்:

இந்த நிலையில் தன் மகனுக்காக நெப்போலியன் செய்திருக்கும் தியாகம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார். இப்படி இவர் இருப்பதற்கு முதல் காரணமே அவருடைய மகன் தனுஷ் தான். தனுசிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்ற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயனில்லாமல் போனது.

நெப்போலியன் மகன் உடல்நிலை:

கடைசியில் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோய் குணப்படுத்த படுகிறது என்ற தகவல் நெப்போலியன் தெரிந்தது. அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு சென்ற நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின் தனுஷின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு நோயிலிருந்து விடுபட்டார். இருந்தாலும் சின்னச் சின்ன பாதிப்புகள் தனுசிற்கு இருந்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் நிகழக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கிறார்.

-விளம்பரம்-

நெப்போலியன் செய்த தியாகம்:

ஒரு கட்டத்தில் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். அதோடு தன் மகனுக்காக பல வசதிகளை கொண்ட ஒரு வீட்டை கட்டி எந்த ஒரு குறையும் இல்லாமல் தன் மகனைப் பார்த்து வருகிறார். தனுஷும் தன்னிடம் இருக்கும் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்தி வரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார்.

நெப்போலியன் மகன் குறித்த விவரம்:

இதனால் தனுசுக்காகவே ஒரு தனி நிறுவனத்தை நெப்போலியன் உருவாக்கி இருக்கிறார். அதில் அவரைப்போல குறைபாடு உள்ள பல குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உடல் நலத்தையும் சரி செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிகளையும் நெப்போலியன் நடத்தி வருகிறார். இப்படி தன் மகனுக்காக எதையும் செய்த நெப்போலியனை பலருமே பாராட்டி இருக்கிறார்கள். அதோடு நெப்போலியன் மகன் திருமண குறித்த அப்டேட்க்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement