விஜய்யும், அஜித்தும் அந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்கள் புலம்பி அழும் காலம் விரைவில் வரும் – போஸ் வெங்கட் எச்சரிக்கை.

0
401
- Advertisement -

தமிழ் சினிமாவின் இந்த நிலைமைக்கு காரணம் விஜய்- அஜித் தான் என்று மனவேதனையில் நடிகர் போஸ் வெங்கட் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர் ஆவார். மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு போஸ் வெங்கட் என்ற பெயரே வந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

- Advertisement -

போஸ் வெங்கட் திரைப்பயணம்:

இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து இருக்கிறார். பின் போஸ் அவர்கள் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருந்தார். சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இருந்த போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

போஸ் வெங்கட் இயக்கும் படம்:

சாண்டில்யனின் கன்னி மாடம் ‘என்ற சரித்திர நாவலில் இருந்து தான் இந்த படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படம் பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் நல்ல பேரை வாங்கினது. இதனை அடுத்து போஸ் வெங்கட் தொடர்ந்து படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகுகிறது. இந்த திரைப்படத்தில் மு.க.ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் உள்ளாக்கப்பட்ட நெருக்கடிகளை மையமாக வைத்தும், ஒரு தலைவனாக மு.க.ஸ்டாலின் உருவாக காரணமாக இருந்த நிகழ்வுகளையும் கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

போஸ் வெங்கட் பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் போஸ் வெங்கட் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், தற்போது தமிழ் சினிமா மோசமான நிலையில் இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால் சினிமா பெரிய சாதனை படைத்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமா அதனால் தான் இறந்து கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமா தற்போது நம் கையில் இல்லை. வெளியாக்களுடைய கையில் தான் இருக்கிறது. விஜய், அஜித்தை வைத்து பணம் சம்பாதிக்க பல நிறுவனங்கள் பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறார்கள்.

விஜய்-அஜித் குறித்து சொன்னது:

இவர்களுடைய படம் ஆயிரம் தியேட்டர்களில் இவர்களுடைய படத்தின் நான்கு காட்சிகள் ஓடும். வேறு எந்த படங்களும் வெளியிடக்கூடாது. அப்படியே வந்தாலும் யாரும் கண்டுகொள்ள கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இவர்களை தாண்டி படம் இல்லை. தமிழ் சினிமா தன் அடையாளத்தை இழந்து கொண்டு வருகிறது. இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எதிர்காலத்தில் ஓடிடியில் யார் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் காலம் வந்துவிடும். மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஒரு நடிகர் வருவார். விஜயும் அஜித்தும் சாதாரணமாக நடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுவார்கள். அவர்கள் புலம்பலால் காலம் விரைவில் வரும். அவர்கள் மாறிய பின் தான் தமிழ் சினிமா நிலை மாறும். எல்லா படங்களும் வெளியானதால்தான் ஆரோக்கியமான சூழல் உருவாகும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement