பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் Blind டீச்சராக வந்த நடிகையா இது ? குடும்பம் புள்ளகுட்டின்னு எப்படி இருக்காங்க பாருங்க.

0
1129
- Advertisement -

கயல் சீரியலில் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பலர் நடித்து வரும் நிலையில் இதே தொடரில் பாஸ் என்கிற பாஸ்கரன் பட நடிகையும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

சினிமாவை பொறுத்து வரை நடிகர் நடிகைகளை விட ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரு சீனில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வந்த இவரும் அந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தமிழ் சினிமா உலகில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷின் இரண்டாவது படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இது 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்தப் படத்தில் வந்த அனைத்து காமெடிகளுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சீரியல் நடிகை அன்னபூரணி.

இந்த படத்தில் கண்ணு தெரியாதவராக இருந்தாலும் ஒரு வேலை செய்து கொண்டு விடாமுயற்சியுடன் போராடும் பெண்ணின் நிலையை பார்த்து ஆர்யா மனம் மாறுவார். பின் தான் நடத்தும் டுடோரியல் காலேஜ்க்கு அவரையே ஆசிரியராகவும் கொண்டுவருவார். நடிகை அன்னபூரணி அவர்கள் மதுரையில் பிறந்தவர்.இவர் சின்னத்திரையில் சன் டிவி, வசந்த் டிவி, விஜய் டிவி, கேப்டன், ராஜ் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் பல ஆண்டுகாலமாக சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது வெள்ளித்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் இவர் நடித்துள்ளார். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தொடர்ந்து வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகை அன்னபூரணி ராமானுஜர் என்ற தொடரின் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் மாமா மாப்பிள்ளை, பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை, மரகத வீனை, வள்ளி, கல்யாண வீடு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியின் அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.


Advertisement