சமூக வலைத்தளம் மூலம் பெண்ணுடன் பழகி பணத்தை இழந்தது தான் மிச்சம் – மலேசியாவில் ஏமாந்த ‘பாய்ஸ்’ மணிகண்டன்

0
118
- Advertisement -

வாழ்க்கையில் தான் சந்தித்த பிரச்சினைகளை குறித்து நடிகர் பாய்ஸ் மணிகண்டன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. நடிகர் மணிகண்டன் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு, கலா மாஸ்டரின் டான்ஸ் குரூப்பில் ஸ்டேஜ் ஷோக்களில் பங்கு கொள்பவர். பின்பு 2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் குமார் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த ஐந்து ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

-விளம்பரம்-

மேலும் மணிகண்டன் நடித்த பாய்ஸ் படம் இன்று அளவு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து காதல் எப்எம், கிச்சா வயசு 16, யுகா, பயம் அறியான், மாஸ்கோவின் காவிரி, குருசாமி, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்த மணிகண்டனுக்கு சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் சினிமா பக்கம் மணிகண்டன் காணவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

மகாராஜாவில் மணிகண்டன்:

இதனிடையே தான் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான ‘மகாராஜா படத்தில் மணிகண்டன் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் மணிகண்டன் நடிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி விரும்பியதாக தகவல்கள் வந்தன. அதேபோல் இந்த படத்தில் மணிகண்டன், தனா என்னும் கதாபாத்திரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டு நடித்திருந்தார். ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருந்தார் என்றும் சொல்லலாம். இனிமேல் மணிகண்டன் நிறைய படங்களில் பார்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மணிகண்டன் பேட்டி:

இப்போது ஓராண்டுக்கு முன்பு மணிகண்டன் அளித்த பேட்டி மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. அதில், பாய்ஸ் படத்துக்கு பிறகு காதல் எஃப் எம், கிச்சா வயசு 16, யுகா படங்களில் நடித்தேன். இதில் யுகா படத்தின் போது எனது அப்பா இறந்துவிட்டார். அப்பாவால் கொஞ்சம் கடன் அதிகமானதால், நான் சம்பாதித்ததில் ஓரளவு கடனை அடைத்தேன். அது ரொம்ப கஷ்டமான காலகட்டம் என்று கூறியிருந்தார் மணிகண்டன்.

-விளம்பரம்-

மணிகண்டனின் வாழ்க்கை:

மேலும் அவர் கூறுகையில், வாழ்க்கையில் நான் நிறைய கஷ்டம், துயரம், ஏமாற்றும், தோல்வி என அனைத்தையும் அனுபவித்து இருக்கிறேன். எல்லா வகையான பிரச்சனையையும் நான் சந்தித்து இருக்கிறேன். ஒரு காலத்தில் குடியாலும், கூடா நட்பாலும் அப்படி இருந்தது. அதனால் வாழ்க்கையின் மீது நான் பழி போட மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அதுபோல் நிறைய பேரையும் காதலித்து இருக்கிறேன். இப்போது எனக்கு 42 வயதாகிவிட்டது இன்னும் நான் சரியாக இருக்கேனான்னு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் அந்த பேட்டியில்.

மலேசியாவில் ஏமாற்றம்:

அதனைத் தொடர்ந்து மணிகண்டன் கூறுகையில், நான் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழகி கடன் எல்லாம் வாங்கி மலேசியா சென்றேன். அங்கு நான் தங்கியிருந்த நாலு நாட்களில் ரொம்ப டார்ச்சர் அனுபவித்தேன். அந்தப் பெண் எப்போதும் பிரச்சினை செய்வதோடு, குடித்துக் கொண்டே இருப்பார். இதன் பின் பணத்தை எல்லாம் இழுந்து எப்படியோ அங்கிருந்து எஸ்கேப் ஆகி வந்து விட்டேன். அப்போது நான் ரொம்ப வெறுமையாக இருந்ததால், அந்தப் பெண்ணை நம்பி மலேசியா சென்று விட்டேன். ஆனால், நான் நினைத்தது ஒன்று. அங்கு நடந்தது ஒன்று என்று நடிகர் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

Advertisement