தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு தமிழ்ல் பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருந்த இவர் சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் “செம்பி” என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், விஜய் டிவி புகழ், தம்பி ராமையா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ்” நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இப்படம் வெளியாகும் முன்பே “செம்பி” படக்குழு இத்திரைப்படத்தை தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பத்திரிக்கையாளர்க்ளுக்கு இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
இதற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் இப்படத்தில் “உன்னிடம் செலுத்தும் அன்பை நீ பிறரிடம் செலுத்து” என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதை சுட்டி காட்டி இப்படம் கிறிஸ்த்துவ மதத்தை பரப்பும் படமா? என்று கேட்டார். இதனால் இயக்குனர் பாபு அது என்னுடைய நம்பிக்கை என கூற மற்றொருவர் இது பகவத் கீதையிலும் உள்ளது எனக் கூற இருவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு விவாதமாக மாறியது. பின்னர் இயக்குனர் பிரபு “அந்த வசனம் உங்களுக்கு வருதத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
இந்த பிரச்னைக்கு பிறகு பேசி இயக்குனர் பிரபு சாலமன் இப்படத்தை உருவாக்க நாங்கள் இரவு பகலாக உழைத்திருக்கிரோம், 2 மணி நேரம் ஓடும் இந்த திரைப்படத்தை எப்படியாவது மக்களை ஈர்க்க வேண்டும் என்று அனைவரும் கடினமாக உழைத்துள்ளோம். ஆனால் இதனை நாங்கள் உழைத்தோம் என்று சொல்லக்கூடாது ஏன்னென்றால் நாங்கள் படத்திற்காக செலவழித்த பணத்தை திரையில் பார்க்க விரும்புகிறோம் என்று கூறினார் இயக்குனர் பிரபுசாலமன்.
அதோடு இப்படத்தில் 60 வயதிலும் பிரமாதமாக நடித்திருக்கும் கோவை சாளரளவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை 750 படங்களை நடித்திருக்கும் இவர் இந்த திரைப்படத்திலும் தன்னுடைய நடிப்பை முழுவதுமாக காட்டியுள்ளார். அதோடு இப்படத்தில் அஸ்வின் அமைதியாக இருந்து இப்படத்தில் ஹீரோயிசத்தை காட்டியுள்ளார். ல் அந்த அளவிற்க்கு நாங்கள் எங்களுடைய உழைப்பே இந்த படத்தில் போட்டிருக்கிறோம் என்று அந்த போட்டியில் இயக்குனர் பாவு சாலமன் கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்துவ ஜெப கூட்டம் ஒன்றில் பிரபு சாலமன் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசி இருக்கும் பிரபு சாலமன் ‘நம்ம கடவுளை வெச்சு தான் கேலண்டர் இரண்டாக பிரிச்சிருக்காங்க. வேறு எதாவத வச்ச பிரிச்சாங்களா’ என்று பேசி இருக்கிறார். மேலும், கும்கி படத்தின் போது தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்தும் அப்போது இயேசு தனக்கு எப்படி பக்க பலமாக இருந்தார் என்பதையும் பேசி இருக்கிறார்.