நிர்வாணமாக நடித்ததாக குறிப்பிட்டு வெளியான வீடியோ – பிரிகிடா சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
1919
brigida
- Advertisement -

இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து பிரிகிடா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

இரவின் நிழலில் பிரிகிடா :

இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பார்த்திபனின் அசாதாரண முயற்சியை வியந்து பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்து இருப்பார்.

சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி :

இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல்.நிர்வாண காட்சியில் பிரிகிடா நடித்தது பலரையும் வியப்படைய செய்து இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாண கோலத்தில் நடித்தது குறித்து பிரிகிடா கூறி இருந்தது, சேலை அணிந்து சென்றால் சரியாக இருக்கிறதா? என பலமுறை சரிசெய்யும் பெண் தான் நான்.

-விளம்பரம்-

பிரிகிடா விளக்கம் :

ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அதற்கு அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார். ஆனால், இதை என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாக இருந்தது.எனது கதாபாத்திரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி விட்டு இப்படி ஒரு சீனும் இருக்கு. அது இருந்தால் தான் அந்த கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் என்று என் பெற்றோரிடம் எடுத்துக் கூறி இருந்தார் பார்த்திபன் சார். பின் அவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அந்த காட்சியை எடுத்து முடித்தோம் என்று கூறி இருந்தார்.

நிர்வாணமாக நடிக்கவில்லை :

இப்படி ஒரு நிலையில் பிரிகிடா குறித்து வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. ஆனது அதில்பிரிகிடா இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து பேசப்பட்டு இருந்தது. அந்த வீடியோவை பகிர்ந்த பிரிகிடா , அந்த காட்சியில் தான் நிர்வாகமாக நடிக்கவில்லை என்றும் தான் அந்த காட்சியில் ஷார்ட்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து இருந்ததாகவும், அதை பலரும் தவறாக புரிந்து கொண்டு நான் நிர்வாணமாக நடித்தது போல புகைப்படங்களை வைத்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement