சரியாக வெற்றியை நோக்கி பயணித்தாரா ‘சாம்பியன்’ – முழு விமர்சனம் இதோ.

0
2879
Champion
- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் “சாம்பியன்”. கபடி மற்றும் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுத்த சுசீந்திரன் அவர்கள் முதல் முறையாக கால்பந்தாட்டந்தை மையமாக வைத்து ‘சாம்பியன்’ படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்வா நடிக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார். உண்மையிலேயே இவர் நேஷனல் ஸ்விம்மிங் மற்றும் இண்டர்நேஷனல் ஸ்குவாஷ் பிளேயர். இந்த படத்தில் மனோஜ் பாரதிராஜா , மிர்னாலினி, நரைன், செளமிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for champion movie tamil

- Advertisement -

சமீப காலமாகவே விளையாட்டை மையப்படுத்தி வரும் கதைகள் தான் அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு பிகில், கென்னடி கிளப் தொடர்ந்து தற்போது சாம்பியன் படம் வந்து உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். நடுத்தர மக்களின் வாழ்க்கையையும், அந்த மக்களின் கால்பந்து விளையாட்டையும் அதை சுற்றி நடக்கும் சூச்சமத்தையும் மையமாகக் கொண்டு உருவான கதை ஆகும். மேலும், இந்த படத்தில் விளையாட்டில் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். இதனை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் படம் வெற்றி கொடுக்குமா?? என்று பார்க்கலாம்.

இதையும் பாருங்க : வேலைக்கானதா ஜெய்யின் ‘கேப்மாரி’ த்தானம். முழு விமர்சனம் இதோ.

கதைக்களம்:

-விளம்பரம்-

நடிகர் விஷ்வா வடசென்னை பகுதியில் வசித்து வருபவர். இவர் ஃபுட்பாலில் மிகத் திறமையாக விளையாடி வருகிறார். வஷ்வாவின் தந்தையாக மனோஜ் பாரதிராஜா நடித்து உள்ளார். இவரும் சிறுவயதிலில் சிறந்த ஃபுட்பால் வீரர். அவரின் நண்பராக நரேன் நடித்து உள்ளார். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். ஆனால், அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக மனோஜ் அரசியலில் ஈடுபட்டுகிறார். பின் விஷ்வாவின் அப்பா இறந்து விடுகிறார். ஆனால், நரேன் ஃபுட்பால் சிறந்து விளங்கியதால் கோச்சராக ஆகின்றார். விஷ்வாவின் அப்பா கால்பந்து விளையாடியதனால் தான் இறந்து போனார் என்று அவருடைய அம்மா விஷ்வாவை கால்பந்து விளையாட அனுமதிப்பது இல்லை.

Image result for champion movie tamil

ஆனாலும், அம்மாவுக்கு தெரியாமல் விஷ்வா நிறைய போட்டிகளில் கலந்து கொள்கிறார். அவருடைய திறமையை பார்த்து ஒரு கால்பந்து பயிற்சி அகாடமியில் சேர விஷ்வாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த அகாடமிக்கு கோச்சாக வருபவர் தான் நரேன். பின் விஷ்வா தன் நண்பன் மனோஜின் மகன் என்று தெரிந்தவுடன் அவருக்கு நிறைய பக்க பலமாக நின்று உதவி செய்கிறார் நரேன். பிறகு விஷ்வாவுக்கு தன் அப்பாவின் மரணம் இயல்பானது அல்ல கொலை என தெரிகிறது. தன் அப்பாவை கொன்றவனை பழி வாங்கினாரா? ஃபுட்பாலில் சாதித்தாரா? தந்தையின் கனவை நிறைவேற்றினானா? என்பது தான் படத்தின் மீதி கதை.

மேலும், விஸ்வாவுக்கு இது தான் முதல் படம். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லாமல் மிக சிறப்பாக நடித்து உள்ளார். மாணவனின் கோபம், கால்பந்து மீது உள்ள ஆர்வம், காதல் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிபடுத்தி இருக்கிறார் இயக்குனர். உண்மையாகவே விஸ்வா கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பாரா?? என்று நினைக்கும் அளவிற்கு அவருடைய காட்சிகள் இருந்தன. நண்பன் மகனின் வாழ்க்கையை பாழாக்கி விடக் கூடாது என்பதற்காக போராடும் நரேனின் கதாபாத்திரம் மிக அருமையாக இருந்தது.

Image result for champion movie tamil

மேலும், வடசென்னை பகுதியில் வாழும் மக்களில் திறமை கொண்ட இளைஞர்களும் உள்ளார்கள். ஆனால், அவர்கள் மீது எப்போதும் ஒரு புகார் இருக்கும். அதனால் எங்கு போனாலும் அவர்களுக்கு காண வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை இந்த படத்தில் அழகாக எடுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். மிருணாளினி இந்த படத்தில் தன்னுடைய அழகான நடிப்பை காண்பித்துள்ளார்.சுஜித் ஒளிப்பதிவு வடசென்னையை மிக அழகாக காட்டியுள்ளது. அரோல் கரோலின் இசையில் பின்னணி ஒவ்வொன்றும் வேற லெவல்.

இதையும் பாருங்க : பிரம்மாண்ட தொடையை காட்டி நித்யா மேனன் கொடுத்த போஸ். மிரண்டு போன ரசிகர்கள்.

பிளஸ்:

வடசென்னை மக்களின் வாழ்க்கை, வன்முறை, சண்டை, அவர்களின் திறமையை எல்லாம் அழகாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

படத்தில் இசை, ஒளிப்பதிவு எல்லாம் சூப்பர்.

புது முக நடிகர் விஷ்வாவின் நடிப்பு சூப்பராக உள்ளது.

Image result for champion movie tamil

மைனஸ்:

இந்த படம் வழக்கமான விளையாட்டு படமாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கதை எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாமே புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்ததால் படம் பெரிய சுவாரசியமாக இல்லை.

இந்த படத்தில் கதாநாயகிகளுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை என்று சொல்லலாம். கமர்ஷியல் படத்திற்காக தான் இவர்கள் உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.

படத்தின் அலசல்:

சுசீந்திரன் திரைப்படத்திற்காக ஒரு கூட்டம் இருக்கும். ஆனால், சமீப காலமாக இவருடைய சில படங்கள் பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை. மேலும், சாம்பியன் படம் வெற்றி பெறுமா?? மொத்தத்தில் சாம்பியன் படம் கோல் அடிக்குமா!!

Advertisement