வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த சந்திரயான் 3,பிரகாஷ் ராஜ் போட்ட பதிவு. மீண்டும் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
891
- Advertisement -

சந்திராயன்- 3 நிலவில் தரை இறங்கியதை குறித்து இந்தியா முழுவதும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரகாஷ் ராஜ் போட்டுள்ள பதிவு மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது இந்தியா முழுவதுமே சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், சந்திராயன் 3 விண்கலம் தான். ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவிற்கு ஏவப்பட்டது.

-விளம்பரம்-

இது சுமார் 40 நாள் பயணம் என்றே சொல்லலாம். நிலவின் தென் துருவத்தில் இன்று சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியா செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். நேற்று மாலை 6.04 மணி அளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்திருக்கிறார். மேலும், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா செய்திருக்கிறது.

- Advertisement -

இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த நிகழ்வை தற்போது நாடே சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபலங்கள் பலரும் சந்தோஷத்தோடும் பெருமையோடும் இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து கூறி பாராட்டி பதிவுகளை போட்டு பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரகாஷ் ராஜும் இதுகுறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அதில் ‘இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் மிகவும் பெருமையாக தருணம் இதை சாத்தியமாக்கிய ISRO சந்திராயன்3, விக்ரம் லேண்டர் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி. நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் இது நமக்கு வழிகாட்டும்’ என்று பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவை கண்ட பலரும் பிரகாஷ் ராஜை திட்டி தீர்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் சந்திரயான்-3 திட்டத்தைவிமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘வாவ், நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்” என குறிப்பிட்டு ‘ஒருவர் தேநீர் ஆற்றும்’ புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த பதிவில் அவர் மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்வதாக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து போய் கடுமையாக பிரகாஷ்ராஜை விமர்சித்து வருகிறார்கள். அதில் சிலர், சந்திரயான்-3 ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பெருமை. அரசியல் நோக்கத்தில் அவமரியாதை செய்யக்கூடாது.டிரோல் செய்யும்போது அரசியலுக்கும், நாட்டிற்கும் இடையிலான எல்லையை தெரிந்து கொள்ளுங்கள் என்றும், ஒருவரை வெறுப்பதற்கும், நாட்டை வெறுப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. உங்களுடைய இந்த கருத்தை பார்ப்பதற்கு கவலயைாக உள்ளது என்றும் கூறி வந்தனர்.

Advertisement