தி.நகர் பாரதிராஜா மருத்துவமனைக்கு உரிமையாளர் யார் ? பாரதிராஜாவே கொடுத்த விளக்கம்.

0
1573
Bharathiraja
- Advertisement -

தி நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனைக்கு உண்மையான உரிமையாளர் குறித்து இயக்குனர் பாரதிராஜாவே கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி -நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

- Advertisement -

பாரதிராஜா திரைப்பயணம்:

அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், தமிழ்`சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அதுமட்டும் இல்லாமல் இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர். பின் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை.

பாரதிராஜா குறித்த தகவல்:

இதுவரை பாரதிராஜா ஆறு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை குறித்து பலரும் பிரார்த்தனை செய்திருந்தார்கள். தற்போது குறித்து உடலில் முன்னேற்றம் தெரிகிறது.

-விளம்பரம்-

பாரதிராஜா மருத்துவமனை சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, சென்னை தி நகரில் இயங்கி வரும் பாரதிராஜா மருத்துவமனைக்கு இயக்குனர் பாரதிராஜா தான் சொந்தகாரர் என்று பலரும் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் கூட பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து பாரதிராஜா கூறியிருப்பது, 1986 ஆம் ஆண்டு சத்யராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் கடலோரக் கவிதைகள். இந்த படத்தை நான் தான் இயக்கி இருந்தேன்.

பாரதிராஜா கொடுத்த விளக்கம்:

இந்த படத்தை வடுகநாதன், நடேசன் ஆகிய இருவர் தயாரித்தார்கள். இந்த படத்தின் மூலம் தான் நடேசன் தயாரிப்பில் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அவர் ஒரு மருத்துவர். இவர் நான் தான் அவரை முதன்முதலாக சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியதால் எனக்கு நன்றி கூறும் வகையில் அவர் என்னுடைய பெயரை மருத்துவமனைக்கு வைத்திருக்கிறார். அவரும் நானும் நண்பர்கள் என்பது வேறு. அது சமயம் அவர் என் மீது வைத்துள்ள அன்பு, மரியாதை தான் என்னுடைய பெயரை மருத்துவமனைக்கு வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement