கொரோனா வைரஸால் உயிரிழந்தால் இப்படி தான் அடக்கம் செய்ய வேண்டுமாம்.

0
4011
coronadeath
- Advertisement -

ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த கொரோனா வைரஸ் கதி கலந்த வைத்து இருக்கிறது. போரை விட பயங்கரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-
Image result for coronavirus india death

- Advertisement -

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : ‘இத நான் பயம்புடுத்த சொல்ல’கொரோனா ஆபத்து குறித்து இத்தாலி நண்பர் சொன்னதை பகிர்ந்த அர்ஜுன்

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு சில நெறிமுறைகளை கூறி உள்ளது. கொரோனாவினால் இறந்தவர்களின் சடலத்தை சுற்றி கூட்டம் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது, சடலத்தைத் தொட்டு அழக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து தடுக்க முடியும்.

Image result for coronavirus india death

கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி டெல்லியில் கொரோனாவினால் பலியான பெண்ணின் உடலை தகனம் செய்வதில் சில மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். உடலை தகனம் செய்தால் தங்களையும் வைரஸ் தாக்கிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரன்தீப் குலோரியா அவர்கள் கொரோனா ஒருவர் சுவாச குழாய் வழியாக பாதிப்பதால் இறந்தவரின் உடல் வழியாக பரவாது, இருமல் வழி மட்டும் தான் பரவும் என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயால் இறந்த உடல்களை தகனம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உடலை தகனம் செய்யும் போது எந்த வகையிலும் உடலை தொட்டு செய்யும் சடங்குகளை செய்ய வேண்டாம். மத முறைப்படி சடலத்தை தொடாமல் மத வேதங்களை படித்தல், புனித நீரை தெளித்தல் போன்றவை மட்டும் செய்தால் போதும். சடலத்தை தொடுவது அல்லது சடலத்தை குளிப்பாட்டுவது, சடலத்தை முத்தமிடுவது, கட்டிபிடிப்பது போன்றவற்றிற்கு எல்லாம் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உடலை தகனம் செய்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதே போல் உடலை எரித்த பின்னர் அந்த சாம்பல் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஏனெனில் சாம்பலில் எந்தவிதமான வைரஸ் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு பெரிய கூட்டங்களும் சேரக்கூடாது. ஏனெனில் தொற்று நோய் வருவதற்கான சூழ்நிலை அது ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Advertisement