-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சாப்பிட்டே பார்க்காம நான்வெஜ் டிஷ்க்கு வெங்கடேஷ் பட் தீர்ப்பு சொல்வது சரியா? – இளம் செஃப் கேள்வி

0
280

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கையாக இருந்த வெங்கடேஷ் பட் விலகியது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான்.

-விளம்பரம்-

தற்போது இவர் சன் டிவியில் ‘டாப் குக் டூப் குக்’ என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் VB Dace நிறுவனம் தான் தயாரிக்கிறது. வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலன்களான KPY தீனா, சூப்பர் சிங்கர் பரத், KPY முத்து, மோனிஷா ப்ளேசி, தீபா போன்ற பலர் இந்த நிகழ்ச்சியில் களமிறக்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிங்கம் புலி, நடிகை சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் அம்மா பின்னி, கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா உட்பட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

டாப் குக் டூப் குக்:

மேலும், இந்த நிகழ்ச்சி கடந்த மே 19ஆம் தேதி சன் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலத்தான் இருந்தது. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் நிகழ்ச்சிக்கு நடிகர் வடிவேலுவை சன் டிவி களமிறக்க இருக்கிறது. இந்த எபிசோடை காண ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்த நெட்டிசன் சிலர், வெங்கடேஷ் பட் சுத்தமான வெஜிடேரியன். அவர் சாப்பிட்டு பார்க்காமலேயே அசைவ உணவுகளைப் பற்றி தீர்ப்பு கொடுப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

வினோத் பேட்டி:

-விளம்பரம்-

இன்னொரு தரப்பினர், இதற்கு முன்பு அவர் அசை உணவை ருசி பார்க்காமல் சொன்ன தீர்ப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடிந்ததா? இப்போது ஏன் தேவையில்லாமல் பிரச்சினை கிளம்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இரு தரப்பிற்கு மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சமையல் கலை நிபுணரும் 25 வருடங்களுக்கு மேலாக கேட்டரிங் இன்ஸ்டியூட் நடத்தி வருபவருமான வினோத் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், வெங்கடேஷ் பட் குறித்த சர்ச்சையை நானும் கேள்விப்பட்டேன். சமையலை கற்றுத் தரும் போதே அதையெல்லாம் படித்து விட்டு தான் வருகிறோம் என்று சில செப் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

சமையல் கலை குறித்து சொன்னது:

உணவை சாப்பிட்டு பார்க்காமல் தொட்டுப்பார்த்து, முகர்ந்து பார்த்து சூப்பர், உணவு ரெடி ஆகிவிட்டது என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு காயோ, கறியோ வெந்ததா?என்றால் கையால் தொட்டு பார்த்து சொல்லிவிடலாம். சில பொருட்களுக்கு மனம் இருக்கிறது. உணவு பண்டமும், சமையலும் முகர்ந்து பார்த்து சொல்லிவிடலாம். ஆனால், சமையலுக்கு அடிப்படையான விஷயம் உப்பு. உப்பில்லாத பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். அந்த உப்புக்கு மனம் கிடையாது. அதை சுவைத்து பார்த்து தான் சொல்ல முடியும். அதே போல ருசி என்பது நாக்கை அடிப்படையாகக் கொண்டது. நாவின் சுவை அறிந்தால் தான் சமையல்.

வினோத் கொடுத்த பதில்:

அந்த நாக்குக்கு சைவம், அசைவம் என்று ருசித்து பார்த்தால் தான் சுவை தெரியும். நானுமே வெஜிடேரியன் தான். ஆனால், சமையல் கலையை படிக்கத் தொடங்கிய போது அசைவம் சாப்பிட தொடங்கிவிட்டேன். இப்ப சைவம், அசைவம் இரண்டையும் செய்து கொண்டிருக்கிறேன். டிவி நிகழ்ச்சிகளில் மிகைப்படுத்தி சொல்லணும் என்று சொல்றாங்களே என்னவோ? ஆனால், அதெல்லாம் இல்லை. நான் ருசித்து பார்க்காமலேயே சுவையை சொல்லி விடுவேனா என்று கேட்டால் முடியாது. அது ஒரு கட்டுக்கதை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. நிகழ்ச்சிகளின் பெயர்களில் கோமாளிகள், டூப் என்று வைத்திருக்கிறார்களே, எதார்த்தத்தில் இப்படி தருகிற தீர்ப்புகள் தான் கோமாளி தனமானது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news