செக்க சிவந்த வானம் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா..?

0
369
chekka-chivantha-vaanam

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” திரைப்படம் நேற்று (செப்டம்பர் 27 ) வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் போன்ற மல்டி ஸ்டார்களை கொண்டு உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

chekka Chivandha vaanam

அதிலும் குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் ஓராண்டிற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால், எஸ் டி ஆர் ரசிகர்கள் குதூகுலமடைந்துள்ளனர். இரண்டாம் நாளான இன்றும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

நேற்று இந்த படம் வெளியாகி இருந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்தப்படம் 8 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் , சென்னையில் உள்ள திரையரங்குகளில் மட்டும் நேற்று ஒரே நாளில் 90 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால் திரையரங்குகளில் முன்பதிவுகளும் நன்றாக நடந்து வருவதாக கூறபடுகிறது . விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள சாமி படமும் நன்றாக இல்லை என்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கே விரும்பி செல்கின்றனர். எனவே, போட்டிகள் ஏதும் இல்லாமல் ராஜ்ஜியம் செய்து வருகிறது செக்க சிவந்த வானம்.