தனது கதையை தழுவி எடுத்த போதிலும் பிரேமம் படத்தின் மீது கேஸ் போட தவிர்த்த காரணம் குறித்து சேரன் சொன்ன பதில்.

0
497
- Advertisement -

தான் இயக்கிய ஆட்டோகிராப் படத்தை தழுவி பிரேமம் படம் இருந்த போதிலும் அந்த படத்தின் மீது வழக்க போடாமல் இருந்த காரணம் குறித்து இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம்.இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப் போன்று கலந்த கலவையாக தான் இருந்தது. இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் திகழ்கிறார்கள்.

- Advertisement -

நிவின்பாலி தொடங்கி சாய்பல்லவி, அனுபமா என பலரும் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதிலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் மலையாள மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

cheran

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்திருந்தார்கள். அந்த வகையில் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்தார்கள். இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து இருந்தார். மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் மீது ழக்குப் பதிவு செய்வதை தவிர்த்து குறித்து இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய சேரன் ‘ பொதுவாக இந்திய சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை பார்த்து அதன் மேல் ஈர்ப்பு உண்டாகி இங்கு படங்களை எடுப்பார்கள். ஹாலிவுட் படங்களை பார்த்துதான் ஈர்ப்பு ஏற்பட வேண்டுமா? மற்ற மாநிலங்கள் இயக்குனர்களை ஈர்க்க கூடாதா?நம்முடைய கதையாக இருந்தாலும் அதை இன்னொருவர் நம்மை விட சிறப்பாக படமாக எடுத்தால் அதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர, பொறாமைப்படக் கூடாது.

எனவேதான் நான் பிரேமம் படம் மீது கேஸ் போடவில்லை என்று பேசியுள்ளார். இயக்குநர் சேரனின் இந்த முதிர்ச்சியான கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோகிராப் படத்திற்கு பின்னர் இயக்குனர் சேரன், தவமாய் தவமிருந்து, மாயக் கண்ணாடி, பொக்கிஷம் என்று பல படங்களை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். ஆனால், இந்த படங்கள் எதுவும் ஆட்டோகிராப் படம் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement