ரஜினி கமல் குறித்த ஒப்பீடு – ட்விட்டரில் சேரனை தாக்கும் ரஜினி ரசிகர்கள். இந்த வீடியோ தான் காரணம்

0
761
Cheran
- Advertisement -

ரஜினியை விட கமல் ஒரு படி மேலே என்று சேரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் சேரன். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டு இருந்தது. அதோடு வசூல் சாதனை பெற்று இருந்தது. பெரும்பாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால் இவருடைய படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். மேலும், சேரன் அவர்கள் இயக்கிய பல படங்கள் தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. பின் இடையில் சில காலம் சேரன் படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார்.

- Advertisement -

சேரன் திரைப்பயணம்:

பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரன் இயக்கி நடித்த படம் ராஜாவுக்கு செக். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவைகளை கொண்டு இருந்தது.

தமிழ்க்குடிமகன் படம்:

அதோடு இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு சேரன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு ‘. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. குடும்பப் பாச கதையை மையமாக கொண்ட இந்த படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது சேரன் படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் கடந்த வாரம் சேரன் நடிப்பில் வெளிவந்த படம் தமிழ்க்குடிமகன். இந்த படத்தை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

சேரன் அளித்த பேட்டி:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் சேரன் பெரியாருக்கு எதிரான வசனங்கள் பேசி இருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்க்குடிமகன் படத்தின் ப்ரோமோஷன் போது சேரன் பேட்டியில் ரஜினி- கமல் குறித்து கூறியிருந்தது, மகாநதி படத்தில் பணிபுரிந்த போது கமல் சாரின் நடிப்பை பார்த்து நான் மிரண்டு விட்டேன். அவரின் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. நான் ரெடி சார் – இரண்டாம் பாகம் பற்றி கேட்ட செல்வராகவனுக்கு 10 ஆண்டு கழித்து பதில் அளித்த திரிஷா

கமல் குறித்து சொன்னது:

மேலும், நான் பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது சிவாஜி தான் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர். அதன் பின்னர் அந்த இடத்தை கமலஹாசன் பிடித்து விட்டார். கமல் சார் போல ஸ்டைலாக டிரஸ், ஹேர் கட், மைக்கை தூக்கி போட்டு பிடிக்கணும் என்றெல்லாம் ஆசை இருந்தது. அப்போது ரஜினியை பிடிக்கும். இருந்தாலும் அவர் மாஸ் ஹீரோவாக மட்டும் தான் இருந்தார். ஆனால், கமல் சார் எல்லாத்துக்குமே ஒரு முன்னோடியாக இருந்தார். அவருடைய நடிப்பில் எதார்த்தம் இருக்கும். நிறைய தெரிந்து கொள்ளலாம் கூறி இருக்கிறார்.

Advertisement