திருமணத்திற்கு முன்பே தன் காதல் கணவன் இயக்கத்தில் சிவாவுன் நடித்துள்ள பிரியா. வைரலாகும் வீடியோ.

0
2543
atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக ஆனார் அட்லீ. அட்லீ அவர்கள் கடந்த ஆண்டு தளபதி விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருந்தார். உலக அளவில் பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அட்லீ முதன் முதலாக ஷங்கர் இடம் தன உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கினார் அட்லி. இந்த குறும்படத்துக்கு பிறகு தான் வெள்ளித்திரையில் அட்லீ சினிமா உலகில் இயக்குனராக அடி எடுத்து வைத்தார் அட்லி.

-விளம்பரம்-

அட்லீ இயக்கிய அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அட்லீ அவர்கள் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணா பிரியா. இவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற சீரியலில் தான் நடித்தார். அதன் பின் சிறு சிறு குறும்படங்களில் நடித்து கொண்டு வந்தார். பின் இவர் சினிமாவில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.

இதையும் பாருங்க : பீச்சில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பிரியதர்ஷினி. வைரலாகும் #Throwback புகைப்படம்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை பிரியா அவர்கள் திருமணத்திற்கு முன் தன் காதல் கணவன் இயக்கிய படத்தில் நடித்து இருந்தார். தற்போது அந்த படத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் அட்லீ அவர்கள் சினிமாவிற்கு முன் ‘முகப்புத்தகம்’ என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ப்ரியாவும் நடித்து இருந்தார்கள், ஏற்கனவே சிவகார்த்திகேயனும், ப்ரியாவும் நெருங்கிய நண்பர்கள்.

ஏனென்றால் இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒன்றாக பணி புரிந்து இருக்கிறார்கள். அதில் இருந்து இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். மேலும், இந்த முகப்புத்தகம் குறும்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியா நடித்து இருந்தார். இந்த குறும்படத்தில் ஹீரோயினுக்கு சிவகார்த்திகேயனின் உண்மையான மனைவி பெயரே வைத்து உள்ளார் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : ‘என் பெற்றோர்கள் புதுமண தம்பதியாக இருந்த போது’ பெற்றோர்களின் அறிய புகைப்படத்தை பதிவிட்ட ரைசா.

-விளம்பரம்-

தற்போது இந்த முகப்புத்தகம் குறும்படத்தின் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லீக்கு ப்ரியாவை அறிமுகம் செய்து வைத்ததே நம்ம சிவகார்த்திகேயன் தான். பின் பல வருடங்களாக நண்பர்களாக இருந்த அட்லீயும், ப்ரியாவும் தங்களுடைய காதலை ஒருவருக்கொருவர் ப்ரொபோஸ் செய்து திருமணம் செய்து கொண்டார்கள். அட்லீ தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தான் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பின்னர் இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சிவர்கார்த்திகேயன் அவர்கள் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement