தற்போது பாடகி சின்மயி அவர்கள் நித்யானந்த கையில் இருந்து பிரசாதம் வாங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைத் தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும், இது குறித்து பல சர்ச்சைகள் இணையங்களில் ஏற்படுத்தி உள்ளது. மேலும், நித்யானந்தாவுடன் பாடகி சின்மயியா?? என்று பல பேர் அதிர்ச்சியில் உள்ளார்கள். சினிமா உலகில் பிரபலமான பின்னணி பாடகி சின்மயி. மேலும்,இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள். ஏன்னா,அந்த அளவிற்கு சமூக வலைத் தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதோடு சில காலமாகவே பாடகி சின்மயி குறித்து பல சர்ச்சைகளும்,விமர்சனங்களும் சமூக வலைத் தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மேலும்,பின்னணி பாடகி சின்மயி அவர்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர்.
பின்பு இவர் எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக் கோழி போன்ற பல திரைப் படங்களில் பாடி உள்ளார். அது மட்டும் இல்லாமல் சின்மயி அவர்கள் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி உள்ளார். அது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த பாடல் ஆன ‘மையா மையா’ என்ற பாடலையும் சின்மயி அவர்கள் தான் பாடி உள்ளார். இப்படி தன்னுடைய வசீகரக் குரலால் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர். இதனைத்தொடர்ந்து சின்மயி பாடகி மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் பின்னணி குரல் தருபவராகவும் இருக்கிறார்.
இதையும் பாருங்க : புதுப்பேட்டை பட நடிகர் மருத்துவ மனையில் அனுமதி. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக அவர் பகிர்ந்த விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது கூட சொல்லலாம். மேலும்,ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை பற்றி சின்மயி பேசிய பேச்சு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு ஆதரவாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவர்களுக்கு உதவும் வகையில் இயக்கங்களை உருவாக்கி உள்ளார். மேலும்,இவர் “me too” என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் அதிகமாக கொண்டு போய் சேர்த்தார் என்று கூட சொல்லலாம். நித்யானந்தாவைப் பற்றி சொல்லவா??? வேண்டும். அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ஆசுவாமி என்றும் சொல்லலாம்.
மேலும், இவருக்கும் சினிமா நடிகைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊருக்கே தெரியும். அந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நித்யானந்தாவிடம் பாடகி சின்மயி அவர்கள் கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து பாடகி சின்மயி அவர்கள் இதற்கு விளக்கம் அளித்து உள்ளார். இது உண்மையான புகைப்படம் இல்லை. வேறு ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து எடிட்டிங் செய்து இணையங்களில் வெளியிட்டு உள்ளார்கள். இது என்னுடைய புகைப்படம் கிடையாது என்று ஆதார பூர்வமாக நிரூபித்து உள்ளார் சின்மயி.