எனக்கு அப்போ 19 வயசு தான், அப்பவே ஏன் சொல்லன்னு கேட்கறவங்களுக்கு என் பதில் – சின்மயி ஆவேசம்.

0
636
chinmayi
- Advertisement -

தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மோசமான சம்பவத்தை குறித்து சின்மயி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இடையே பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

- Advertisement -

வைரமுத்து-சின்மயி சர்ச்சை:

இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். இதனிடையே பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காதலி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான். இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

சின்மயி-ராகுல் குறித்த தகவல்:

பின் இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார். மேலும், ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் தான் இருந்தது. பின் சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது. பலரும் சின்மயிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சின்மயி பேட்டி:

இந்த நிலையில் இவர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த போது பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன். வாடகை வீடு கூட கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டேன். வீட்டில் அப்பா இல்லை. இதனால் வீட்டு உரிமையாளர்கள், அவர் ஏன் விட்டுட்டு போனாரு? யாரெல்லாம் வீட்டுக்கு வருவாங்க? பெண்களுக்கு நல்ல ஒரு துணை வேண்டும் என்று பல கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தார்கள். சென்னையில் நான் 32 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இதுவரை 42 வீடுகள் மாறி இருப்போம். இதன் மூலம் நான் நிறைய மோசமான அனுபவங்கள் சந்தித்து இருக்கிறேன்.

வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவம்:

அதுமட்டுமில்லாமல் பல மோசமான மனிதர்களையும் நான் சந்தித்து இருக்கிறேன். தேவையில்லாமல் என்னுடைய விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைத்து அறிவுரை சொன்னார்கள். என்னமோ இவர்கள் தான் என் கற்பை காப்பாற்றுவது போல நடந்து கொண்டார்கள். என் கற்பை எனக்கு பாதுகாக்க தெரியும். அப்போது பேசாமல் இப்போது ஏன் பேசுகிறாய்? என்று கேட்கிறார்கள். அப்போது எனக்கு 19 வயது. அந்த வயதில் தைரியம் எனக்கு இல்லை. மீ டு விவகாரத்திற்கு பிறகு தான் அனைவரும் குட் டச், பேட் டச் குறித்து பெண்களிடம் வெளிப்படையாக பேசுகிறார்கள். இந்த வயதிலேயே என்னால் பல விஷயங்களை தைரியமாக பேச முடியவில்லை. பெண்கள் எப்போதும் அவர்கள் காலில் நிற்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்க வேண்டும். யாரிடமும் கையேந்தி நிற்கும் நிலையில் எந்த பெண்ணும் இருக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement