கீழே என் அம்மா இருக்காங்கனு தெரிஞ்சே மேல என்னிடம் இப்படி பண்ணான் அந்த ஆளு – சின்மயி கொடுத்த ஷாக்.

0
860
chinmayi
- Advertisement -

வைரமுத்து குறித்து முதன் முதலாக மனம் திறந்து சின்மயி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : பெரியார் படிப்பகத்தில் திருமணம் முடித்துவிட்டு, கோயிலில் வைத்துத் தாலி கட்டியது ஏன் ? விமரசங்களுக்கு புகழ் பதிலடி.

சின்மயி-வைரமுத்து ப்ரச்சனை:

இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். மேலும், இந்தப் பிரச்சனையில் இருந்து சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிமைத்தனம், பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு சுதந்திரம் கருத்து தெரிவித்து வருகிறார்.

-விளம்பரம்-
Chinmayi-vairamuthu

சின்மயி அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் சின்மயி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் கவிஞர் வைரமுத்து குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சின்மயி கூறியிருந்தது, நான் வைரமுத்து பற்றி கூறியது அனைத்தும் உண்மை. நான் சொன்னதை நினைத்து மன நிறைவாக தான் இருக்கிறேன். இனி யாரைப்பற்றியும் தேவையில்லாமல் புகழாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்தில் அவரைக் குறித்து டீவ்ட் போடும்போது பயந்தேன். இருந்தாலும், உண்மையை வெளியுலகிற்கு கொண்டுவர துணிச்சலுடன் செய்தேன்.

வைரமுத்து குறித்து சொன்னது:

கவிஞர் வைரமுத்துவை குறித்து நான் மட்டும் புகார் அளித்ததாக சிலர் சொல்லி இருந்தார்கள். ஆனால், என்னுடன் சேர்ந்து 19 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அது வெளியே வரவில்லை. வைரமுத்துக்கு அரசியல் பின்புலம் அதிகம் இருக்கிறது. எனக்கு பல கொலை மிரட்டல்கள் எல்லாம் வந்தது. நான் அதற்கெல்லாம் பயப்படவில்லை. அந்த அளவிற்கு அவர் நிறைய ஆட்கள் வைத்திருப்பவர். மேலும், வைரமுத்து என்னை திடீர் தின்று கட்டி பிடித்தார்.

வைரமுத்து செய்த செயல்:

அவர் தப்பான நோக்கத்தில் தான் என்னை கட்டி அணைத்தார் என்பது எனக்கு புரிந்தது. அப்போது என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. என் மூளைக்கு என்ன செய்வதென்றும் புரியவில்லை. உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். கீழே என்னுடைய அம்மா இருக்கும் போது தான் அவர் என்னிடம் இப்படி தவறாக நடந்து கொண்டார் என்று வைரமுத்து தன்னிடம் நடந்தது குறித்து முதன்முதலாக சின்மயி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Advertisement