‘முதல்வரின் செயலால் வயிறு எரிகிறது’ – வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின் , கொந்தளிக்கும் பாடகி சின்மயி

0
1624
Chinmayi
- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல வைரமுத்துவை யார் பாராட்டினாலும் தன் மீது வைரமுத்து செய்த பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்துவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்குறார். அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஸ்டாலின் ‘கவிப்பேரரசு அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!’ என்று பதிவிட்டுள்ளார். மு க ஸ்டாலினின் இந்த பதிவை கண்டு கடுப்பான சின்மயி ‘பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய நபருக்கும் முதல்வர் தேடிச் சென்று நேரில் வாழ்த்து தெரிவிப்பது கொடுமையாக உள்ளது.

அவர் மீது புகார் கூறினேன் என்பதால் பல விருதுகளைப் பெற்ற நான் 2018-ம் ஆண்டில் இருந்து தமிழ் திரைப்படத்துறையில் பல தடைகளை எதிர்கொள்கிறேன்.கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன். பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த போதும் உனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என பார்க்கிறேன் என்கிறார்கள். பல பெண்களைப் பாலியல் ரீதியாக அச்சுறுத்திய அவர், திமுகவின் துணையுடன் புகார் கூறும் பெண்களை மிரட்டி வருகிறார்.

-விளம்பரம்-

அவர்களின் துணையோடு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.திமுகவின் பலத்தை அவர் பயன்படுத்துவார் என்பதால் பல பெண்கள் பேசாமல் இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு என வாய்கிழிய பேசும் அரசியல்வாதிகள் வைரமுத்து என்றதும் வாயை மூடிக் கொள்கிறார்கள். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரைக் கொண்டாடுவதும், அவர் மீது புகார் கூறிய பெண்களை துன்புறுத்துவதுதான் மண்ணின் கலாச்சாரமாக மாறிவிட்டது.

இவர்களின் செயலால் வயிறு எரிகிறது. இங்கு பெண்ணின் உணர்வு, கல்வி, விழிப்புணர்வு எல்லாமே பூஜ்ஜியமாக உள்ளது. பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இந்த மனிதர்களைப் பாதுகாப்பார்கள். இந்த மண்ணில் நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது’’ எனப் கொந்தளித்து பதிவிட்டுள்ளார் சின்மயி.

Advertisement