வெறும் 6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்த குக் வித் கோமாளி புகழ் – எப்படினு பாருங்களேன்.

0
2897
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்ச்சியில் இருந்து எத்தனை பேர் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம், ரியோ, பிரியா பவானி சங்கர் என்று பலரும் விஜய் டிவியில் இருந்து சென்றவர்கள் தான். அந்த வகையில் சமீப காலமாக விஜய் டிவியில் கலக்கி வரும் புகழும் சினிமாவில் என்ட்ரி ஆகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதில் எத்தனையோ கோமாளிகள் வந்தாலும் புகழ் தான் பலரின் பேவரைட்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளிய புகழுக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவர்  ’LOL: எங்க சிரி பாப்போம்’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான இந்த ஷோவை விவேக் மற்றும் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்கள். 

இதையும் பாருங்க : காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா – சக நடிகரோடு திருமணமாம்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி தான் விவேக் பங்குபெற்ற கடைசி நிகழ்ச்சி என்பதால் இந்த ஷோவை பலரும் தேடி சென்று பார்த்தனர். நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், டிவி பிரபலம் புகழ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டனர். சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்ச்சியின் டாஸ்க்.

6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பானது. இந்த ஷோவில் அனைவரும் வெளியேறி நிலையில் கடைசியாக புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் டைட்டில் வின்னர்கள் என அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டது. 6 மணி நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சம்பாதித்த புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

-விளம்பரம்-
Advertisement