தமிழகத்தின் சக்திவாய்ந்த ஒரு ஆண், என்ன கொடுமை செய்த ஒருத்தரை – வைரமுத்து குறித்தும் ஸ்டாலின் குறித்தும் கொந்தளித்த சின்மயி.

0
653
- Advertisement -

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா குறித்து சின்மயி கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. மேலும், இந்த மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தம் ஆனாலும் ஏன் இந்த மாதிரி? ஆளுக்கெல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள்? இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள்? என்று சின்மயி விமர்சித்து டீவ்ட் போட்டு வருகிறார். அதே போல வைரமுத்துவை யார் பாராட்டினாலும் தன் மீது வைரமுத்து செய்த பாலியல் தொல்லை குறித்து முறையிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் வைரமுத்துவை மீண்டும் விமர்சித்துள்ளார் சின்மயி.

- Advertisement -

கவிஞர் வைரமுத்துவின் 30 மாத உழைப்பில் உருவான ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்றது. நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங் கவிதைகளின் பெருந்தொகுப்பான இந்த கவிதை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த செய்தியால் கடுப்பாகி இருக்கும் சின்மயி ‘ தமிழ்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் சிலர் என்னைத் துன்புறுத்தியவரை மேடையேற்றருக்கிறார். ஆனால், நானோ தடை செய்யப்பட்டு என்னுடைய வாழ்க்கையின் பாதியை இழந்துவிட்டேன். பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பும், நேர்மையாகப் பேசும் நபர்களை சிறையில் அடைக்கும் போது, ​​இந்தக் கணத்தில் இருந்தே அழிந்து போகட்டும்.

-விளம்பரம்-

என் விருப்பம் நிறைவேறும் வரை நான் பிரார்த்தனை செய்வேன், தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன் – எப்படியும் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். சின்மயியின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர் ‘ நீங்க ஏன் பெண்கள் பாலியல் குற்றங்கள்ளுக்கு எதிராக ஒரு அமைப்பு தொடங்க கூடாது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சின்மயி ‘ தொடங்கி? எவன்கிட்ட நியாயத்துக்கு போகறது? இவங்ககிட்டயா?

வைரமுத்துவிடம் இருக்கும் அரசியல்திகள் மட்டும் எவ்ளோ பேருன்னு பாருங்க. இந்த மாதிரி ஒரு சூழலில் நியாயம் எப்படி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இன்னொரு பயனர் ‘மேடம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே முடியும்’ என்று பதிவிட்டதற்க்கு ‘தண்டனை கொடுப்பது யார் அது தான் இங்கு கேள்வி என்று கூறியுள்ளார்.

Advertisement