பிக் பாஸில் இருந்து வெளியில் வந்ததும் நிக்சன் சந்தித்த முதல் போட்டியாளர் – வைரலாகும் புகைப்படம்.

0
274
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரத்தை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் அன்னயா, வெளியேறி இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரீட்சயமற்ற நபர்களில் ஒருவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்களுடன் சண்டைக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன்:

குறிப்பாக, இவர் வினுஷாவை உருவ கேலி செய்திருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியிருந்தது. இது குறித்து கமலும் கண்டித்திருந்தார். அதற்கு பின் நிக்சன் bully கேங்க்குடன் சேர்ந்து கொண்டு செய்த வேலைகள் எல்லாம் அளவே இல்லை. அர்ச்சனா, விசித்திரா இருவரையும் நிக்சன் மோசமாக தாக்கி பேசி இருந்தார். இதனாலே இவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதோடு இந்த சீசனில் நிக்சன் – ஐசு இருவரின் விஷயம் தான் காதல் கண்டன்ட்டாக இருந்து வந்தது.

நிக்சன் – ஐசு காதல்:

இவர்களின் கதை காதலை போல இல்லாமல் Cringe தனமாக தான் இருந்தது. இவர்கள் இருவரும் செய்த பல செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. சொல்லப்போனால் ஐசுவின் செயல்களால் தங்கள் மானம் போகிறது என்று அவரை வெளியில் அனுப்புமாறு அவரின் பெற்றோர்கள் சேனல் இடம் அழுத்தம் கொடுத்தாகவும், அதனால் தான் அவரை வெளியில் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. அதே போல ஐசு வெளியேறியதில் இருந்து நிக்சன் மீது தான் பல போட்டியாளர்கள் குறை சொன்னார்கள்.

-விளம்பரம்-

பூர்ணிமாவுடன் ரோமன்ஸ் :

ஐசு இல்லனா பூர்ணிமா என்று கடைசி சில நாட்களாக பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்த செயல்கள் இவரது வெளியேற்றத்திற்கு அணித்தனமான அடித்தளம் போட்டது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்தவுடன் விக்ரம் மற்றும் ஜோவிகாவை சந்தித்து இருக்கிறார் நிக்சன். அதே போல வெளியேறிய பின் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார் நிக்சன். அதில் ‘ இப்போதான் எல்லாத்தும் பாத்தேன். எதிர்பாக்காத எல்லாத்தையும் எதிர்ல பாத்தது என்ன பீல். எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ், இவ்ளோ பேருக்கு என்ன புடிச்சிருக்குன்னு உள்ள இருக்க வரைக்கும் எனக்கு தெரியல.

நிக்சனின் முதல் பதிவு :

ஒருவேள தெரிஞ்சிருந்தா இன்னும் Effort போட்ருப்பனோ? ச்ச, அதெல்லாம் யோசிக்கிவே இல்ல, என்ன மன்னிச்சுடுங்க’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ள நிக்சன்’ ஆனால், இவரது இந்த பதிவிற்கு கீழ் 30% தான் இவருக்கு ஆதரவாக கமன்ட் குவிந்து வருகிறது. மீதம் 70% கமெண்ட்ஸ் இவரை திட்டி தீர்த்து தான் வருகிறது. இதனால் தனது கமன்ட் பகுதியையே முடக்கி இருக்கிறார் நிக்சன்.

Advertisement