விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கருப்பு, மாப்பிள்ளையை பற்றி விசாரிப்பதற்காக அவர்களுடைய ஹோட்டலில் தெரியாத நபர் போர் ரூம் எடுத்து தங்கினார். அதே ஹோட்டலுக்கு தாமரையுமே வந்தார். தாமரையை பார்த்தவுடன் மாப்பிள்ளை நந்தகுமார் நண்பர்கள், இன்னைக்கு நல்ல வேட்டை என்று சந்தோசப்பட்டு கொண்டிருந்தார்கள். உண்மை தெரியாமல் தாமரையுமே வசமாக ஹோட்டலில் சிக்கி ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். ஆனால், தாமரைக்கு தெரியாமல் அவர்கள் கேமராவில் வீடியோ எடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் கருப்பு ஓட்டல் முழுவதுமே ஏதாவது துப்பு கிடைக்குமா? என்று தேடிக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் கண்மணி, எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா? னக்கு ஆறுமுகம் தாலி கட்டவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் அதற்கான முயற்சியில் தான் இருக்கிறேன். நீ கவலைப்படாதே எல்லோருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என்று சொன்னார். பின் போன் செய்த தமிழ்ச்செல்வி, நீங்கள் ஓட்டலில் மட்டும் இல்லாமல் வெளியிடத்திலும் விசாரியுங்கள் என்று கருப்புக்கு ஐடியா சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, கண்மணி திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பத்தா, நீ திருமணத்திற்கு வர மாட்டாயா? நீ தான் இதையெல்லாம் எடுத்து செய்யணும் என்று எமோஷனாக பேசினார். உடனே தமிழ்ச்செல்வி, நான் எந்த உரிமையில் வந்து இதையெல்லாம் செய்வது? எங்கிருந்தாலும் கண்மணி வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் கருப்பு, ஓட்டலுக்கு அருகில் உள்ள பூக்கடை, பானி பூரி கடை, ஆட்டோ ஸ்டாண்ட் என்று விசாரித்துக் கொண்டே இருந்தார். யாருமே ஓட்டலை பற்றியும் ஹோட்டல் ஓனர் பற்றியும் சரியான தகவலை சொல்லவில்லை. இதனால் கருப்பு என்ன செய்வது என்று புரியவில்லை.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கருப்புவை பார்த்த ஆட்டோ டிரைவர், இந்த ஓட்டலில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை. இந்த ஓட்டலுக்கு வரும் பெண்கள் எல்லாம் அழுது கொண்டே வெளியே போவார்கள். அந்த ஹோட்டலுக்கு வந்த பெண்களே ஒரு 15 நாள் கழித்து மீண்டும் வருவார்கள். ஆனால், வெளியே வரும்போது அழுது கொண்டுதான் வருவார்கள். என்ன நடக்கிறது? ஏன் அழுகிறார்கள்? என்று தெரியவில்லை என்றார். இதை கருப்பு , தமிழ் செல்விக்கு போன் செய்து சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, தப்பான விஷயம் நடக்கிறது என்றால் அங்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து அவர்கள் அதை வைத்து மிரட்டணும் என்று உண்மையை கண்டுபிடித்து விடுகிறார். அப்போது கருப்பு, அந்த ஓட்டலில் தான் தாமரை தங்கி இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே தமிழ்ச்செல்வி, சீக்கிரம் போய் அவளை காப்பாற்றுங்கள். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்று சொல்கிறார். அதற்குப்பின் தாமரையை பார்த்த கருப்பு, நடந்ததை எல்லாம் சொல்கிறார். தாமரையுமே ஷாக் ஆகி இருக்கிறார். பின் தன் ரூமிற்கு வந்த சர்வன்ட் பாய் நடந்து கொண்ட விஷயத்தை சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் தமிழ்ச்செல்வி சொன்ன ஐடியாவை கருப்பு, தாமரை இடம் சொல்கிறார். இன்னொரு பக்கம் கல்யாண மண்டபத்திற்கு செல்வதற்கு ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கிளம்புகிறார்கள். அப்போது கண்மணியை ஆறுமுகம் தான் அழைத்துக் கொண்டு வருகிறார். வண்டியில் வரும்போது கண்மணி, நீ தாலி கட்டவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலங்கினார். ஆறுமுகத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் அந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்று தாமரை துணி மாற்றுவது போல பேசி ட்ராமா செய்தார். உடனே கருப்பு கேமராவை மறைத்ததால் நந்தகுமார் நண்பர்கள் புலம்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






