விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வி இருக்கும் இடத்திற்கு போன சேது, வழக்கம் போல் அவரிடம் சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேது, என்னுடைய துணிகள் எல்லாம் துவைத்துவை என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுடன் சேர்ந்து வாழ வந்தேன். உங்களுக்கு சேவகம் செய்யவில்லை என்று நக்கலாக சொல்லி சிரித்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா நடந்ததை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சாப்பிட போனார். அப்போது அப்பத்தா, அந்த வீட்டில் தான் சாப்பிட வேண்டும். நீ இங்கு வரக்கூடாது என்று சொன்னார்.

அப்பத்தா, எந்த ஒரு பெண்ணின் தேவை இல்லாமல் உன்னால் வாழ முடியாதா? நீ சாப்பிடுவது என்றால் உன்னுடைய வீட்டில் உன்னுடைய பொண்டாட்டி இடம் சொல்லி சமைத்து சாப்பிடு. ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்பி என்று திட்டி விட்டார். இதனால் சேது கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை சந்தித்த சேதுவின் சித்தி, கடை பக்கம் போனேன். நீ கர்ப்பமாக இருப்பதால் பழம் வாங்கிக் கொண்டு வந்தேன். நீ அங்கு வந்து மகாராணி போல் வாழ வேண்டியது.
சின்ன மருமகள் சீரியல்:
உன்னுடைய நிலைமை எப்படி இருக்கிறது பார். நான் எப்போதும் உனக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று பேசி இருந்தார். ஆனால், தமிழ் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேது, தனக்கு தெரிந்ததை சமைத்தார். தமிழ்ச்செல்வி வாய்க் ருசியாக சமைக்கிறார். இருவருமே தனித்தனியாக தாங்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டார்கள். சேது சமைத்த சாப்பாடு வாயிலேயே வைக்க முடியவில்லை. இதனால் அவர் சாப்பாட்டை ஆர்டர் போட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சேது ஆர்டர் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு உடம்பு முடியாமல் போனது. இதனால் சேது அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பின் தமிழ் செல்வி கல்லூரிக்கு கிளம்பினார். ஆனால், சேது முடியாது என்று மறுத்தார். உடனே தமிழ்செல்வி, வக்கீலுக்கு போன் செய்ய, அவர் படிக்க அனுமதிக்கவில்லை என்றால் சேது மீது கேஸ் போடலாம் என்றார். அதனால் சேது எதுவும் பேசவில்லை. தமிழ்செல்வி கல்லூரி சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேது வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று பிரியாணி சமைத்து வைக்க, இதை பார்த்த அப்பத்தா பிரியாணியில் உப்பு, காரத்தை கொட்டி வைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது பிரியாணி எடுத்து சாப்பிட்ட, காரம் தாங்க முடியாமல் கத்தினார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய தோழியுடன் கல்லூரியில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ்செல்வியின் பள்ளி நண்பர், ஏதாவது வேண்டுமா என்று கேட்கிறார். உடனே தமிழ்ச்செல்வி, உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா? என்று கேட்டவுடன் அவர், சிரித்துக் கொண்டு சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் சேதி என்ன செய்வது என்று புரியாமல் வீட்டில் அமைதியாக உட்க்கார்ந்து கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது சேதுவின் அத்தை வேண்டும் என்று தமிழ்செல்வியை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு சேது கோபப்பட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த தமிழ்செல்வியின் பள்ளி தோழன், டெம்போவில் ஏற சொல்கிறார். தமிழ் செல்வி, அவருடைய தோழியுமே ஏறி செல்கிறார்கள். இதை ஃபோனில் செய்து வீடியோ எடுத்துக் கொள்கிறார் சேது அத்தை வைத்த ஆள். இன்னொரு பக்கம் ஆறுமுகத்தின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடல் போகிறார். மருத்துவர்கள், அவருடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. சீக்கிரம் ஆப்ரேஷன் செய்யணும். லட்ச கணக்கில் பணம் தேவை என்பதால் ஆறுமுகத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதை அறிந்த ராஜாங்கத்தின் மகள் தன்னுடைய அப்பாவிடம் ஆறுமுகம் அக்காவின் ஆபரேஷனுக்கு உதவி செய்ய சொல்கிறார். அவருமே சமாதிக்கிறார் இத்துடன் சீரியல் முடிகிறது






