விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி என்னென்னவோ டிராமா செய்து திருமணத்தை நடத்த பார்த்தார். ஆனால், ராஜாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே நந்தகுமார், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. குறை இருக்கும் பெண்ணை கட்டிக்கொள்ளனும் என்று எனக்கு அவசியமில்லை என ரொம்ப மோசமாக கண்மணியை பேசி இருந்தார். அதனால் கோபப்பட்டு சேது, நந்தகுமாரை அடித்து விட்டார். அதற்குப்பின் மண்டபத்திற்கு கருப்பு, தாமரை இருவருமே வந்துவிட்டார்கள். அப்போது கருப்பு- தாமரை இருவருமே நடந்த எல்லாத்தையும் சொன்னார்கள். இதை கேட்டு ராஜாங்கம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மண்டபத்திற்கு வந்த போலீஸ், நந்தகுமாரையும் அவருடைய குடும்பத்தையும் கைது செய்தது. ஈஸ்வரி தனக்கு ஒன்னும் தெரியாது போல நந்தகுமார் குடும்பத்தை திட்டிக் கொண்டிருந்தார். கோபத்தில் நந்தகுமாரின் அப்பா, நீ சொத்திற்கு ஆசைப்பட்டு சொன்னதால் தான் நாங்கள் பெண் கேட்க வந்தோம். மற்றபடி எங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே கிடையாது என்று சொன்னார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, தனக்கு தெரிந்த ஒருவரை மாப்பிள்ளையாக அழைத்து வர, அவரும் பணத்திற்காக ஆசைப்படுகிறார் என்று தெரிந்தவுடன் ராஜாங்கம் வேண்டாம் என்றார். பின் சேது, எல்லா வகையிலும் ஆறுமுகம் தான் கண்மணிக்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்ல, ராஜாங்கம், ஆறுமுகத்தை மண்டபத்திற்கு அழைத்து வர சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோடில் நல்லபடியாக ஆறுமுகம்- கண்மணி திருமணம் நடந்து விட்டது. வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். தமிழ்ச்செல்வி திருமணம் நடந்த சந்தோஷத்தில் அங்கு இருந்து சென்று விட்டார். அதை பார்த்து சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது ராஜாங்கம், தன் மகளின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, நான் வேண்டும் என செய்யவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.

நேற்று எபிசோட்:
பின் ஈஸ்வரியின் கணவர், சாட்டை எடுத்து வந்து தன் மனைவி, மகள் என்று கூட பார்க்காமல் அடித்தார். அதோடு வீட்டை விட்டு கொட்டகையில் இருக்க சொன்னார். அதற்குப்பின் அப்பத்தா, நம் வீட்டிற்கு வந்த பிரச்சனையை தமிழ்செல்வி தான் தீர்த்து வைத்தார். அவள் தான் நம் குடும்பத்திற்கு ஏற்ற மருமகள். அவளுக்கு விவாகரத்து கொடுத்து அனுப்பி வைக்க வேண்டாம் என்று சொன்னார். இதை கேட்டு தாமரையின் அம்மா கோபப்பட்டு திட்டினார். உடனே அப்பத்தா, தாமரையின் அம்மா செய்த வேலையைப் பற்றி பேசி இருந்தார். பின் ராஜாங்கம், சந்தோசமான நேரத்தில் தேவையில்லாமல் பேச வேண்டாம் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹோட்டல் ஓனர், தமிழ்செல்வியை பார்த்து பயங்கரமாக திட்டுகிறார். இனிமேல் இந்த இடத்தில் வேலை செய்ய தேவையில்லை. ஒழுங்கு மரியாதையாக கிளம்பு. உனக்கு சம்பளமலம் கொடுக்க முடியாது என்று திட்டி அனுப்பி விடுகிறார். இதையெல்லாம் அப்பத்தா, மலர் இருவருமே பார்த்து விடுகிறார்கள். பின் அந்த ஓனரை சந்தித்த அப்பத்தா, அவள் யார் தெரியுமா? அமைச்சர் மருமகள். அவளை மரியாதையாக நடத்து என்று சொல்கிறார். இதனால் அந்த ஓனர் ஆடிப் போய் மீண்டும் தமிழ்செல்வியை வேலைக்கு சேர்த்து கொள்கிறார். இன்னொரு பக்கம் கொட்டைக்கு போக ஈஸ்வரியும் அவருடைய மகளும் வேதனையில் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போது தமிழ்செல்வியை பார்த்தவுடன் ஈஸ்வரி சண்டைக்கு போகிறார். அதற்கு தமிழ்செல்வி, நீங்கள் செய்த வேலையால்தான் உங்களுக்கு இந்த தண்டனை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி இருக்கும் இடத்திற்கு கண்மணி-ஆறுமுகம் வருகிறார்கள். சந்தோஷமாக தமிழ் செல்வி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த சேது, கண்மணி பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது தமிழ்செல்வி, ஆறுமுகத்தை மாப்பிள்ளை என்று மரியாதையாக உறவு முறைப்படி கூப்பிடுங்கள் என்று சொல்வதால் சேதுவுமே அப்படியே கூப்பிடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






