விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கண்மணி, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. யாருமே என் விருப்பத்தை கேட்கவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுங்கள் அண்ணி என்று ரொம்பவே கதறி அழுதார். அதற்கு தமிழ்ச்செல்வி, நான் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நீ கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டீர்களா. அவள் யாரையாவது காதலிக்கிறாளா? என்று கேட்டு திருமணத்தை நடத்துங்கள் என்று சொன்னார். இதனால் கோபப்பட்ட சேது, என் தங்கை ஒன்றும் அப்படிப்பட்டவள் கிடையாது.

உன்னை காதலித்த பாவத்திற்கு தான் நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என்று தமிழ்செல்வியை திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் சேதுவின் சித்தி ஈஸ்வரி, மாப்பிள்ளையின் அப்பாவிற்கு ஃபோன் செய்து திருமண சொத்தில் டீலிங் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை ஒரு ஹோட்டலில் தன்னுடைய நண்பர்களிடம் குடித்துக்கொண்டு மோசமாக பேசிக் கொண்டிருந்தார். அதோடு அந்த ஹோட்டலுக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து அவர்களிடம் தவறாகவும் நடக்கிறார்கள். இது தெரியாமல் சேது தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இன்னொரு பக்கம் ஆறுமுகத்திடம் சேது, கண்மணி பற்றி விசாரித்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
தமிழ்ச்செல்வி வேலை தேடி அலைந்தார். அப்போது ஒரு ஓட்டலில் வேலைக்கு ஆள் தேவை என்பதை பார்த்து அந்த ஹோட்டல் ஓனரிடம் பேசி இருந்தார். அந்த ஹோட்டல் ஓனருமே வேலைக்கு எடுத்துக் கொண்டார். தமிழ்செல்வி வேலையை முடித்து வீட்டிற்கு வர லேட் ஆனது. இன்னொரு பக்கம் செய்து தமிழ் செல்வி வீட்டுக்கு வரவில்லை என்று ஈஸ்வரி, சேதுவிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி இடம் சேது, எதற்காக லேட்டாக வந்தாய்? என்று கேட்டு சண்டை போட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
உடனே தமிழ்ச்செல்வி, ஏன் கல்லூரி முடித்து லேட்டாக வந்தேன் என்று தன்மையாக கேளுங்கள் பதில் சொல்வேன். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னை பற்றி தவறாக சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார். மறுநாள் காலையில் தமிழ்செல்வி நேரம் ஆகவே எழுந்து வேலைக்கு சென்று விட்டார். பின் வேலைக்கு சென்ற இடத்தில் தாமதமாக வந்ததால் அந்த ஓனர் தமிழ் செல்வியை திட்ட, இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் செல்வி தன்னுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் சேது தூங்கி எழுந்தவுடன் தாமரையும், அவர் அம்மாவும் தமிழ்செல்வி நேரமாக எழுந்து கிளம்பி சென்றதைப் பற்றி சொன்னார்கள். இதனால் கோபப்பட்ட சேது திட்டி விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்மணியின் கல்யாண பத்திரிகையில் சேது பெயருக்கு பக்கத்தில் தமிழ்ச்செல்வியின் பெயர் வந்திருக்கிறது. இதை பார்த்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சண்டை போடுகிறார்கள். அப்பத்தா, மலர் இருவருமே அந்த பெயர் அப்படியே இருக்கட்டும் என்கிறார்கள். அப்போது சேது, அவள் என் வாழ்க்கை விட்டு போன பிறகு பெயர் எதற்கு? என்று சொல்லி விடுகிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த ஓட்டலுக்கு சேது தன்னுடைய நண்பரை அழைத்து வருகிறார். தமிழ் செல்வி ஓட்டலில் வேலை செய்வதை பார்த்து சேது ஷாக் ஆகிறார். பின் தமிழ்ச்செல்வி சாப்பாட்டை பரிமாறும்போது அங்கு குறுக்கே வந்த சிறுவன் தமிழ்செல்வியை தள்ளி விடுகிறான்.

சீரியல் ட்ராக்:
அதனால் சேது மீது தண்ணீர் கொட்டி விடுகிறது. இதை பார்த்த ஹோட்டல் ஓனர் தமிழ்ச்செல்வியை கண்டமேனிக்கு எல்லார் முன் அவமானப்படுத்தி விடுகிறார். சேதுவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் ஓனரிடம் சேது, அந்த பொண்ணு மீது எந்த தவறும் இல்லை. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குப்பின் வேலையை முடித்துவிட்டு தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வருகிறார். இதை பார்த்த சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே கோபப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். உடனே தமிழ்ச்செல்வி அவர்கள் பதிலுக்கு பதில் கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






